இன்னுமாடா இந்த உலகம் உங்கள நம்புது? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நம்ம ஆன்மீக குரு மகா விஷ்ணுவோட ஆதரவாளர் ஒருத்தர் கிட்ட இன்னைக்கு போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“யோவ்… உங்க குரு ஜியை அலேக்கா தூக்கி ஜெயில்ல அடைச்சிட்டாங்களாமே. முன் ஜென்மத்துல ஏதாவது பாவம் பண்ணாறான்னு” கேட்டேன்.

அதுக்கு அவரு, “எங்க குரு ஜியை பத்தி உங்களுக்கு இன்னும் முழுசா தெரியலை. ஜெயில்ல இருந்து வெளிய வர்றதுக்கும் அவருக்கிட்ட மந்திரம் இருக்கு. இன்னும் இரண்டு நாள் தான்… வெளிய வந்துருவாரு பாருங்கன்னு” சொன்னாப்ல…

இதை நினைச்சி சிரிக்கவா? அழுகவான்னு தெரியாம போனை வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
சனிக்கிழமை சாயந்திரம் சோடா வாங்கினாலே சந்தேகத்தோடுதான் பார்ப்பாங்க
படிக்காதவன்™
உனக்கான நேரம் வரும்போது அலாரம் அடிக்கும் அதுவரை தூங்கிக்கொண்டிரு…
கோழியின் கிறுக்கல்!!
திருமணத்துக்கு முன் தான் ‘Mis’understanding! திருமணத்துக்கு பின்பு, ‘Mrs’understanding!!
Sasikumar J
போன ஜென்மத்துல பாவம் பண்ணுனதுக்கு உப்புமாவாகவும், புண்ணியம் பண்ணவங்களுக்கு கேசரி ஆகவும் கிடைக்கும்…!
ச ப் பா ணி
பக்கத்தில் வீட்டில் பேசுவோர் சத்தம் தெளிவாய்க் கேட்டால்.. பக்கத்து வீட்டிலும் பவர் ஆஃப் ஆயிடுச்சுனு அர்த்தம்
கோழியின் கிறுக்கல்!!
தியேட்டருக்கு உள்ள போறப்ப நம்மை check பண்றது Bomb இருக்கான்னு பாக்க அல்ல, ஏதாவது உணவுப் பொருள் இருக்கான்னு பாக்க தான்!!
சரவணன். 𝓜
தலைவரே,பள்ளியில அறிவியலுக்கு எதிரா பேசின மகாவிஷ்ணு மேல என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?
~ கொஞ்ச நாள் முன்னாடி நடிகர் தாமு பள்ளில பேசினப்ப என்ன பண்ணோம்
எதுவுமே பண்ணல
~அதுக்கு அப்புறமும் RSS பேச்சாளர்கள் பள்ளியில் பேசினாங்களே,அப்போ என்ன பண்ணோம்?
எதுவுமே பண்ணல.
~இப்பவும் அதேதான்
ச ப் பா ணி
பொதுக்குழு என்பது யார் யார் கட்சியில் இருக்காங்க என்பதை அறிந்து கொள்ள நடக்கும் கூட்டம்
Sasikumar J
படம் முழுக்க வீடியோ எடுக்குறவன எல்லாம் விட்டுருங்க ஸ்டேட்டஸ் வைக்க எடுகுறவனை மட்டும் கரெக்டா புடிங்க…!
ச ப் பா ணி
அந்த “ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண” பாட்டு பாடி முடிவதற்கும், விநாயகர் சதுர்த்தி முடிவதற்கும் சரியாய் இருக்கும்
லாக் ஆஃப்
+1
4
+1
16
+1
1
+1
6
+1
1
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *