நேத்து நைட்ல இருந்து பரம்பொருள் மகா விஷ்ணு பேசுன பேச்சு தான் சோஷியல் மீடியாவுல ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு.
இன்னைக்கு காலையில ட்விட்டர ஓபன் பண்ணி பார்த்தா, ரிசைன் அன்பில் மகேஷ்னு ஹேஷ்டாக் டிரெண்டிங்ல இருந்துச்சு…
உடனே, இதுபத்தி நம்ம திமுக ஐடி விங் நண்பர் ஒருத்தர்கிட்ட போன் அடிச்சு கேட்டேன்,
“நண்பா, ரிசைன் அன்பில் மகேஷ்னு ஹேஷ்டேக் போடுறதே நாங்க தான். பள்ளிக்கூடங்கள்ள ஆர்.எஸ்.எஸ் கிளாஸ் எடுத்தா இதுதான் நிலைமை. வடிவேலு சொன்ன மாதிரி தான், வார்டன்னா அடிப்போம்னு” சொன்னாப்ல..
“நீங்க நடத்துங்க நண்பான்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.
அப்டேட்ஸ் பாருங்க…
மனோ
“சொந்த வீடு கட்டி அதுல தூங்கிப் பாரு.. அந்த சுகமே வேற.. ”
” நா இப்பவே நல்லா அடிச்சுப்போட்டா மாதிரி தான்டா தூங்குறேன்.. ”
மனைவி ஓட்டும் வண்டியில் பயணிக்கும் பல ஆண்கள் ‘Driving School Instructor’ ஆக மாறி விடுகிறார்கள்!!
To. கறிக் கடைக்கார் “எஞ்ஞான்றும் மாப்பெரிது” ல ஒரு அரைக் கிலோ கறி கொடுங்க!
ச ப் பா ணி
நானும் TVKதான் தமிழக வெற்றிக் கழகமா ப்ரோ இல்ல ப்ரோ தமிழக வாழ்வுரிமைக் கட்சி