சம்பளத்த காணோம் ’ஜி’ : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

மாசம் தொடங்கி 3 நாள் தான் ஆகுது… நேத்து சம்பளம் வாங்கிட்டேனு சந்தோசமா டீ வாங்கி தந்த பாபு இன்னைக்கு சோகமா டீக்கடைல உட்காந்திருந்தான்.

என்னனு கேட்டதுக்கு.. “நேத்து தான் சம்பளம் வந்துச்சி… இன்னைக்கு காலைல எந்திருச்சி பாத்தா எல்லா EMI யும் பிடிச்சிட்டாங்க”னு பரிதாபமா சொன்னான். ’சரிப்பா நீ வாங்குனுதுக்கு தானே புடிச்சிருக்காங்க அதுக்கு என்ன?’னு கேட்டேன்.

அது பிரச்சனை இல்ல… EMIன்ற பேர்ல நேத்து எடுத்த பேங்க்காரன் இன்னைக்கு  மினிமம் பேலன்ஸ்னு இருந்த அமெளண்ட்டையும் பிடிச்சிட்டான்… அதான் கஷ்டமா இருக்கு”னு சொன்னான் பாருங்க…

அவனுக்கும் ஒரு டீ வாங்கி குடுத்துட்டு, மொபைல என் பேங்க் பேலன்ஸையும் செக் பண்ணிட்டே கெளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
‘ம்’ கொட்டுவதில் பெண்களும், ‘உம்’ கொட்டுவதில் ஆண்களும் பிரச்சனையை எளிதில் கையாள்கின்றனர்.
கோழியின் கிறுக்கல்!!
பல இடங்களில் போக்குவரத்து காவலர்கள் நிற்பது, வெறும் சடங்கிற்காகவே!!
கோழியின் கிறுக்கல்!!
நாங்க சின்ன பசங்களா இருக்கும் போது வாயில் “Reel” விட்டு சுத்திட்டு இருந்தோம், இப்ப “Insta Reels” விட்டு சுத்திட்டு இருக்காங்க!!
ச ப் பா ணி
எதுக்குமே ஆசைப்படாத பாலகுமாரன்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.!
கோழியின் கிறுக்கல்!!
தேர்வில், நல்லா படிச்சவன் Point, Pointஆ எழுதுவான், சுமாராக படிச்சவன் Para, Paraவா எழுதுவான், ஆனா ஒண்ணும் படிக்காதவன் தான் பக்கம் பக்கமா எழுதுவான்!!
ச ப் பா ணி
இன்டிகேட்டர் போட்டால் அந்தப்பக்கம் மட்டும் தான் வாகனத்தை திருப்பமுடியும் என்பது போல் வாகனத்தை வடிவமைக்கனும்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நம்ம பாஸ்வேர்டு எல்லாம் ஹேக்கர்ஸுக்கு தெரியாம பாத்துக்கறமோ இல்லையோ மனைவிக்கு தெரியாம பார்த்துக்கனும். இல்லேன்னா எக்ஸ்களோட நமக்கு உள்ள கடைசி தொடர்பும் கட் ஆயிரும்.
 டீ இன்னும் வரலை
நிச்சயம் பண்ணுன மறுநாளே பொண்ணு காதலனோட ஓடிப்போனதுக்கு சம்மந்தம் பண்ணுன மாப்பிள்ளையும் அவங்க வீட்டுக்காரங்களுமே வருத்தப்படாம போறாங்க…
நீ ஏன்ம்பா சோகமா இருக்கே…
நான் கல்யாண மண்டப ஓனர்…ணா
கோவிந்தராஜ்
She ~ புரிஞ்சிக்கோங்க நீங்க லவ் பண்ற பொண்ண விட உங்கள லவ் பண்ற பொண்ண லவ் பண்ணுங்க
~கரெக்ட்டு தான் ஆனா என்ன தான் யாரும் லவ் பண்ணலயே
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share