மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டேனே? – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

நண்பர் சொன்னாரு,  “ஓபிஎஸ் மாதிரி யாரும் மோடிக்கு வாழ்த்து சொல்ல முடியாதுங்க… எலெக்‌ஷன் ரிசல்டே இன்னும் முழுசா வரல அதுக்குள்ள வாழ்த்து சொல்லிட்டாரு பாருங்க.

இந்த எலெக்‌ஷன் மட்டுமில்ல இதுக்கு முன்னாடி நடந்த நாடாளுமன்ற தேர்தல், மற்ற மாநிலங்கள்ள நடந்த சட்டமன்ற தேர்தல்னு எந்த தேர்தல் வந்தாலும் மோடிக்கு மொத ஆளா வாழ்த்து சொல்லிறாருன்னு” சொன்னாப்ல…

”யோவ் நீ வேற… அவரு விடுற அறிக்கையில எந்த மாநில தேர்தல் நடக்குதோ அந்தந்த மாநில பெயரை மட்டும் எடுத்துட்டு சேம் அறிக்கையை அப்படியே போடுறாருன்னு” சொன்னேன்.

இதை நம்பாத நண்பன், அறிக்கையெல்லாம் தேடி படிச்சி பார்த்தான். அப்புறம் கொஞ்ச நேரத்துல சைலண்ட்டா கிளம்பிட்டான்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J

நம்மளயே டார்கெட் பண்றாங்க அப்படின்னு நினைத்து வருத்தப்படாமல், நம்மளயும் டார்கெட்டா வைக்கிறாங்க அப்படின்னு சந்தோசபடனும்…!

நெல்லை அண்ணாச்சி

” மக்களைத் தேடி மருத்துவம் “ஐ.நா.விருது….

# other States..நம்ம list லயே இல்லையே..

கடைநிலை ஊழியன்

கையில் காசும் தேவையில்லை.. பையில் purse ‘சும் தேவையில்லை..

credit கார்டும் தேவையில்லை.. debit கார்டும் தேவையில்லை..

மொபைலில் gpay, phonepe இருந்தால் போதுமே..

ச ப் பா ணி

உண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு ஆண்ட்ராய்ட்

போன் வைத்திருக்கும் குழந்தைக்கு தான் கொடுக்கனும்

#எவ்வளவு அமைதி

பாண்டி பிரகாஷ்

என்னிடமே வைத்துக்கொண்டு எங்கெங்கோ தேடுகிறேன்; பக்குவத்தை..

கோழியின் கிறுக்கல்!!

கோபத்தின் போதும் நம்மைப் பற்றி தவறாய் பேசாத நட்போ, உறவோ கிடைக்கப் பெற்றவன், பாக்கியசாலி!!

கடைநிலை ஊழியன்

tell me about yourself..

எங்க company ல யார interview எடுத்தாலும் இத தான் முதல்ல கேப்போம்..

நெல்லை அண்ணாச்சி

புரியாத தேவையற்ற” பன்ச் “இருந்தால் ..நம்மவர்..!!!

சரளமாக பேசினால் மக்கள் செல்வன்…!!!

# BIGGBOSS

லாக் ஆப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எனக்கு இன்னும் வயசாகலங்க!” – நடிகர் ஜீவா

அதிமுகவுக்குள் குழப்பம்: கட்சியை தக்கவைக்க எடப்பாடி போராட்டம்… விளாசிய சிவசங்கர்

+1
3
+1
15
+1
1
+1
7
+1
2
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *