உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு ஆபிஸ் வர்ற வழியில நம்ம விஜய் ரசிகர் ஒருத்தர பார்த்தேன்.

கையில கொடை, ரெயின் கோட் எல்லாம் வாங்கிக்கிட்டு ரோட்டுல நடந்து போயிக்கிட்டு இருந்தாப்ல.

“என்ன நண்பா… மாநாட்டுக்கு எப்போம் போறீங்கன்னு” அவருக்கிட்ட கேட்டேன்.

“26-ஆம் தேதி கிளம்புறேன் நண்பா… சும்மா தெறிக்க விடப்போறோம்னு” உற்சாகமா சொன்னாப்ல…

“சரி நண்பா, என்ன புதுசா கொடை, ரெயின் கோட்லாம் வாங்கியிருக்கீங்கன்னு” கேட்டேன்.

“அது ஒன்னும் இல்ல… எப்ப மழை வருதுன்னே சொல்ல முடியல. மாநாடு நடக்குற நாள் ஒருவேளை மழை பெஞ்சா கூட இந்த ரெயின் கோட்ட மாட்டிக்கிட்டு கொடைய புடிச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்னு” சொன்னாப்ல.

“இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் விஜய்ய யாராலையும் அடிச்சுக்க முடியாதுன்னு” அவருக்கிட்ட சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

காளையன்
எவ்வளவு சம்பாரிச்சாலும் அது பணம்தான்…
எள்ளளவு சிரிச்சாலும் அது குணம்தான்..

ச ப் பா ணி
வலியுறுத்தல் is a word
கெஞ்சிக் கேட்டுக்கிறோம் is an emotion

 

நெல்லை அண்ணாச்சி
சீன ஆக்கிரமிப்பு பற்றி
பேசி இருப்பாரோ…!!!?
# சீன அதிபர் – மோடி சந்திப்பு…!!

Mannar & company
ஏன்ணே அவனை அடிக்கிறிங்க?
பின்னே என்னப்பா.. போலி டாக்டர், போலி போலீஸ், போலி ஹாஸ்பிடல், போலி போலீஸ் ஸ்டேஷன் போலி டோல் கேட் போலி IAS officer , போலி அமலாக்கத்துறை
Latest ah போலி நீதிமன்றம்னு குஜராத்ல இருக்கே நம்ம “ஜீ”யாவது அசலான்னு கேட்குறான்பா!

பாக்டீரியா
தமிழ்த்தாய் வாழ்த்துல திராவிட வார்தைய விட்டீயே, தேசிய கீதம்ல திராவிட வார்த்தை வருதே…
~ அய்யயோ அத மறந்துட்டேனே

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கிறது, உதயநிதியும் வளர்ந்திருக்கிறார்” – ஸ்டாலின் பாராட்டு!

திருவள்ளூர் ரயில் விபத்து… என்.ஐ.ஏ சம்மனுக்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு!

+1
7
+1
24
+1
0
+1
7
+1
0
+1
3
+1
1