அவ்ளோதான் முடிச்சிவிட்டீங்க போங்க… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

“அதிமுக பூத்துக்குலுங்கும் மலர் போன்றது… மக்கள் எனும் தேன் ஆதரவாய் இருக்க… கூட்டணி கட்சிகள் தேனீக்களாய் தேடி வரும்னு நம்ம எடப்பாடி ஐயா இன்னைக்கு கவிதை மழை பொழிஞ்சிருக்காருன்னு” நண்பர் ஒருத்தர் சொன்னாப்ல.

“இதையே தான், 2019 நாடாளுமன்ற தேர்தல்ல இருந்து அவரு சொல்லிக்கிட்டு இருக்காரு. எப்போம் அதிமுகங்குற மலர், பாஜகங்குற தாமரை மலர் கூட சேர்ந்துச்சோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு போன்னு” சொன்னேன்…

நண்பர் அமைதியா கிளம்பிட்டாப்ல.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu
குஜராத்தில் ” போலி ” கோர்ட்டு நடத்தி நீதி வழங்கிய ” நீதிபதி ” கைது – செய்தி
என்ன தீர்ப்பு சொல்லலாம் ன்னு கடவுளிடம் கேட்டிருப்பாரோ

Sasikumar J
~ நமக்கானது கூட்டத்தில் எங்கோ தான் தொலைந்து கிடக்கும் நாம்தான் தேடி எடுக்கணும்…!
~ என்னத்த…
~ தீபாவளி டிரஸ் தான்…!

ச ப் பா ணி
இறுதியில் கேட்கும்
Any questions? என்பது மீட்டிங் முடிச்சுக்கலாம் என்பதற்கான National Anthem

Mannar & company™????
உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுப்பதைவிட,
உங்க மனைவிக்கு பிடித்ததையே தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான தீபாவளி ஷாப்பிங்காக இருக்கும்!

ச ப் பா ணி
ஆண்டவா அணுகுண்டு வெடிப்பவரை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த பிஜிலி வெடி வெடிப்போரிடமிருந்து காப்பாற்று

கோழியின் கிறுக்கல்!!
‘Terms and Conditions’ சரியா படிக்காம கையெழுத்து போட்டு மாட்டிக் கொள்வதில்,
கல்யாணமும் கடன் வாங்குவதும் ஒன்றே!!

சரவணன்
#BREAKING | வங்கக்கடலில் ‘டாணா’ புயல் உருவானது! தானே புயலின் தம்பி டாணா வந்தால் வீணா போகாது.. பூருங்க மக்களே திரும்பவும் எல்லா கடைக்குள்ளேயும்
படிக்காதவன்™
வீரம்னா என்ன தெரியுமா அஞ்சு தோசை சாப்பிட்ட பிறகு குறை சொல்வதில் இருக்கு…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்… மூன்று பேர் பலியான சோகம்!

டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் ‘வை’யண்ணா… அதிமுகவுக்குள் E.D. ஆட்டம் ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share