மழைக்கால பரிதாபங்கள்… அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட ஷாப்பிங் போயிருந்தேன்.

கடையில இருந்து ஒரு ஏழு, எட்டு பெர்ஃபியூம் வாங்குனான்.

“என்னடா இவ்வளவு பெர்ஃபியூம் வாங்குறேன்னு” கேட்டேன்.

“அது ஒன்னும் இல்ல நண்பா… மழைக்காலம் ஆரம்பிச்சிட்டு. இனிமே டிரஸ் துவைச்சி காயப்போடுறதெல்லாம் பெரிய தலைவலி. பேண்ட், சர்ட் போட்டுக்கிட்டு பெர்ஃபியூம அடிச்சி விட்டேன்னு வச்சிக்க சும்மா கமகமன்னு இருக்கும்னு” சொன்னான்…

இது நல்ல ஐடியாவா இருக்கேன்னு நானும் அஞ்சு பெர்ஃபியூம் வாங்கிட்டு வந்துட்டேன்

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
பேசாம ஆபிஸுக்கே போய்ருக்கலாம்..
வீட்டு வேலை சொல்லியே கொல்றாங்க
Sasikumar J
ஒரு வாரம் உட்காந்து வேலை பார்க்கிறது எல்லாம் ஒரு மணி நேரம் கறிக்கடையில நிக்குறதுக்கு தான்…!
சரவணன். 𝓜
நித்யா மேனன் ~ “மேனன்ல ஒரே ஒரு எழுத்தை மாத்தி மெனன் ன்னு மாத்தினேன்.. டோட்டல் கம்யூனிட்டியும் க்ளோஸ்…”
செங்காந்தள்
லஞ்சம் வாங்குபவர்கள் எந்தத் துறையில் பணியாற்றினாலும் அது “வருவாய்த் துறை” தான்…!!!
Sasikumar J
கல்யாணத்துக்கு அப்புறம் பாகிஸ்தான் பார்டர் கூட எந்த தடையும் இல்லாமல் தாண்டி போயிட்டு வரலாம் ஆனா பிரண்ட்ஸ பாத்துட்டு வரேன்னு மட்டும் சொல்லிட கூடாது…!
ச ப் பா ணி
எப்பப் பாரு நான் வெஜ் சாப்பிடுறியே,என்ன ரீசனுக்காக புடிச்சிருக்கு…?
புடிச்சிருக்கு… அதான் ரீசன்!
 டீ இன்னும் வரலை
எடுக்குறது ஒன்னேகால் கரண்டி பிரியாணி அதுக்கு ஏன்டா அந்த பிரியாணி அண்டாவை லொட்டு லொட்டுன்னு 15 தடவை தட்டுறீங்க….
லாக் ஆஃப்
+1
7
+1
20
+1
0
+1
9
+1
0
+1
3
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *