இன்னைக்கு நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன்…
அவருக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தபோது, “வெயில் வச்சி வாட்டி எடுக்குதுன்னு பசங்க ஏசி வாங்கி கேட்டானுங்க… நானும் புது ஏசி வாங்குனா ரெண்டு வாரமா மழை பெஞ்சிக்கிட்டு இருக்குன்னு” சொன்னாப்ல..
அதுக்கு நான், “இனிமேல் வெயில் அதிகரிக்கும்னு வானிலை மையம் சொல்லிருச்சி… அதனால பிரச்சனை இல்ல நண்பான்னு” சொன்னேன்.
நண்பர், “பசங்களுக்கு தாங்க பிரச்சனை இல்ல, மறுபடியும் இந்த வெயிலுக்குள்ள ஆபீஸ் போகனும்னு நினைச்சாலே கிறுகிறுங்குதுன்னு” சொன்னாப்ல…
அப்புறம் நண்பர் கொடுத்த ஜூச குடிச்சிட்டு நான் அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் -தமிழ்நாடு வெற்றிக்கழகம்
#2026க்கான பிள்ளையார் சுழி
மைசூர் ஹோட்டலில் மோடி தங்கியதற்கான வாடகை பாக்கி ரூ.80 லட்சம்…ஹோட்டல் நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை ‘எச்சரிக்கை’… ஜி… உங்க கவுரவம் என்ன?…கண்ணியம் என்ன? மதிப்பு என்ன?…இப்படி ஆகிப் போச்சே ஜி!


ஆண்கள் திருமணத்திற்கு முன்பு ‘பேச்சுலர்’, திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ …!!!
ச ப் பா ணி
SRH ஆ கொல்கத்தா வா யாருக்கு சப்போர்ட் பன்றதுனே தெரியலயே
நியூட்ரல் மைண்டுடன் CSK&RCB fans
மொபைல் – என்ன இவ்ளோ notification வந்துருக்கு.. எடுத்து பாக்காம இவ்ளோ நேரம் தூங்குற..
இன்னைக்கு Sunday டா ஃபூல்..
பதற்றம் என்ற வார்த்தையே என்னுடைய அகராதியில் இல்லை!- பிரதமர் மோடி!
ஆமாமா… மணிப்பூர்ல அவ்வளவு பதற்றம் நிலவிய போதே நீங்க பதற்றமடையாதவராச்சே ஜி .?!
ஞாயிற்றுகிழமை காலை போல் வாழ்க்கையை புரிய வைக்கும் பொழுது வேறில்லை நேற்றைய விடுமுறை முடிந்து விட்டதே என்ற கடந்த கால சோகம், இன்றைய விடுமுறை முழுதாக கையில் உள்ளது என்ற நிகழ்கால நிம்மதி, நாளை மீண்டும் திங்கட்கிழமை என்கிற எதிர்கால பயம் என சகல உணர்ச்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கலவை
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…