இப்படியும் ஒரு தேர்தல் கூட்டணி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தரோட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன். அப்போம் “எலெக்‌ஷன் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு, கூட்டணி விவகாரம்லாம் எப்படி போகுதுன்னு” அவர்கிட்ட கேட்டேன்.

அதுக்கு அவரு, “ஒரு பக்கம் திமுக கூட்டணியில சீட்டு கேட்டு எல்லா கட்சிகளும் அழுத்தம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.

இந்தப்பக்கம் பாஜக கூட்டணியில தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தன்னோட பேரு மூணு எழுத்து இருக்குறதால மூணு சீட்டு கேட்டுருக்காரு. ஆனா, நம்ம பாஜக குழுவோ, ஜி.கே.. இந்த இரண்டு எழுத்த நீங்க மிஸ் பண்ணீட்டிங்க, அதனால அஞ்சு சீட்ட வைச்சிக்கோங்கன்னு சொல்றாங்களாம். இதுதான் லேட்டஸ்ட் கூட்டணி நிலவரம்ன்னு” சொன்னாப்ல…

“இப்படியே போய்க்கிட்டு இருந்தா, அடிக்கடி கூட்டணி மாத்துற நம்ம கட்சிக்காரங்க, இனி பேரையும் மாத்திருவாங்க போலன்னு” கமெண்ட் அடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
தடை அதை உடை- expectation
மாற்றுப்பாதையில் செல்கிறேன்- reality
கடைநிலை ஊழியன்
ஏன் லேட் னு கேட்டா, “டூ வீலர் ரிப்பேர் ஆகிருச்சு” , “பஸ் பிரேக் டவுன்” னு சொல்வதெல்லாம், ஆதாம் ஏவாள் காலத்து பொய்கள் !!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கீழ விழுந்த காசை குனிஞ்சு எடுக்கற நேரத்துல லட்ச ரூபாய் சம்பாதிச்சுருவேன்னு சிலர் சொல்லுவாங்களே, அந்த மாதிரி கிடைக்கற சின்ன டைம்ல கூட எனக்கு நானே ஏழரையை இழுத்து விட்டுக்கறதுல நான் பெரிய எக்ஸ்பர்ட்.
mohanram.ko
நாங்க நாலு பேரு. எங்களுக்கு பயம் னா என்னன்னே தெரியாது. கட்சியில் ஆளே இல்லை என்றாலும் தொகுதி பங்கீடு பற்றி பேசுவோம்…
Mannar & company™
நீயா நானாவில் கோபிநாத் தனது கோட்டை கழட்டிட்டு ஷோ பண்ண ஆரம்பிச்சா.. வெயில் காலம் வந்திடுச்சுனு அர்த்தம்!
சரவணன். 𝓜
அம்பானி மகன் கல்யாணத்துக்காக காஷ்மீர் விமான நிலையத்தை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஆக்கினது கூட ஓகே தான்.. ஆனா ஒரே ஒரு குறை மட்டும் தான்.. கல்யாண நாள் அன்னைக்கு மட்டும் ஒரு நாள் லீவு விட்டா இன்னும் நல்லா இருக்கும்..
தர்மஅடி தர்மலிங்கம்
4-வது முறையும் மோடியை பிரதமராக்கினால் வறுமை ஒழியும்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! பொருளாதாரத்தை ஒழிச்ச மாதிரிங்களா.?!
ஒருவர் உருவாக்கிய பிரச்சனைக்கு அவரே தீர்வு காண முடியாது.. ~
இவ்ளோ அறிவா பேசறியே, யார்ன்னே நீ? ஹோட்டல்ல சாம்பார் பாக்கெட் பார்சல் கட்டி தர்ற ஆள்..
~ அப்ப சரி அப்ப சரி..
+1
1
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *