உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு காலையில வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

தம்பி ஒருத்தன் விஜய் கட்சி கொடி மத்தியில அரசியல்வாதி ஸ்டைல்ல போஸ் கொடுத்த மாதிரி போட்டோ எடிட் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டிருந்தான். Update kumaru memes jokes

“என்னடா… கட்சியில சேர்ந்துட்டியான்னு” அவனுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தேன்.

“ஆமான்னா… நேத்து தான் கட்சியில சேர்ந்தேன்னு” சொன்னான்.

“வாழ்த்துக்கள் டா… என்ன திடீர்னு கட்சியில சேர்ந்துட்டேன்னு?” கேட்டேன்.

“என் கேர்ள் ப்ரண்ட் விஜய் ஃபேன் னா. அவள இம்ப்ரஸ் பண்றதுக்காக சேர்ந்தேன்னு” ஒரு காரணம் சொன்னான்.

அந்த மெசேஜை பார்த்து ஷாக்கான நான், “வாழ்க வளமுடன்னு” ஒரு மெசேஜை தட்டி விட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J

ஏழைகளுக்கு ‘மத்தி’
நடுத்தர வர்க்கத்திற்கு ‘சங்கரா’
மேல்மட்ட மக்களுக்கு ‘வஞ்சிரம்’

ரசிகன் 🌾💛

தூக்கம் வராமல் இருக்க டீ” குடிக்க ஆரம்பிச்சேன் மேடம்!
இப்போ டீ’ குடுக்கலைன்னா தூக்கமே வர மாட்டேங்குது மேடம்!

குருநாதா

நானும் முன்னலாம் பயங்கர சாதி வெறி புடிச்சவனா இருந்தேன் நாளாக நாளாக
அத கண்டாலே வெறுப்பா இருக்கு

எந்த சாதி சார்?

பொஞ்சாதி

ச ப் பா ணி

கெமிஸ்ட்ரி ஒத்துப் போனால் காதல்;
பிளாசப்பி ஒத்துப் போனால் கல்யாணம்

balebalu

சிறை தண்டனை கொடுக்குறாங்களோ இல்லையோ
தினம் தினம் மைக் முன்னாடி நின்னு இனிமே கூச்சம் இல்லாம பேட்டி கொடுக்க கூடாது என்றாவது
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கணும்

காதுகள் பாவமில்லையா 😩

ச ப் பா ணி

பொறுமையின் எல்லை என்பது கைப்பேசி சார்ஜ் ஏறும் வரை பொறுத்திருப்பது

iQKUBAL

பல்லு விளக்க Brush இல்லாத உனக்கு,
பளபளபளன்னு Crush எதுக்கு?

கோவிந்தராஜ்

ஞாயிற்றுக்கிழமையில் கோழிக்கறி வாங்க கோழிக்கடைக்கு செல்லும் ஆர்வம்..😬😬😬

திங்கள் கிழமை வேலைக்கு செல்வதிலும் இருக்க வேண்டும்..😬😬

ச ப் பா ணி

மாச சம்பளத்தை ஒரு சட்டையின் விலை அட்டையில் பார்த்தால் வருவது மரணபீதி

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share