இன்னைக்கு ஏர்போர்ட்ல பேட்டி கொடுத்த நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “தமிழகத்தில் வெற்றி பெற்ற எனது நண்பர் ஸ்டாலின், ஆந்திராவில் வெற்றி பெற்ற நண்பர் சந்திரபாபு நாயுடு, மீண்டும் ஆட்சியமைக்க உள்ள பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்துக்கள்னு” சொல்லிருக்காரு…
நம்ம சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு குட் பை சொன்னதுல இருந்து இப்படி தான் தென்னை மரத்துல ஒரு குத்து பனை மரத்துல ஒரு குத்து ஃபார்முலாவ ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
‘உம்’ கொட்டுவது என்பது சில சமயங்களில்.. நமக்கு காது கேட்பதை தெரிவிக்கத்தான்
ℳsd இதயவன்
என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை ~ சந்திரபாபு நாயுடு இருக்காத பின்ன முதல்வருக்கு முதல்வர் ஆன மாதிரியும் ஆச்சு மோடியை ஜி யை முறுக்கின மாதிரியும் ஆச்சு?!
FB மெசேஜ் ஒண்ணு படிச்சிட்டு இருக்கும் போது , இதென்னடா “சனாதானம்” பத்தி சம்பந்த மில்லாத விசயமா இருக்கே..!! செகண்ட் டைம் படிக்கும் போது தான் கவனிச்சேன் அது “சமாதானம்” பற்றியது.. அதிகமா பேசப்படற விசயத்தைதான் மனசு முதல்ல கவனிக்குது.. காட்சிப் பிழை…
நிதிஷ்கு துணை பிரதமர் பதவி தர ஜீ ஒப்புதல். நீ என்ன எனக்கு பதவி தர்றது.
நான் ஆதரவு குடுத்தாதான் நீயே பிரதமர். ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிட்டு திரியிறியா?

சோலோவா கேமரா ,வெளிநாடுனு சுத்திட்டு இருந்த ஒரு மனுஷன,ஆந்திரா உன்னது, கடப்பா என்னதுனு சொல்ற லெவலுக்கு டீலிங் பேச வச்சிட்டேங்களேடா
இந்த மாதிரி முடிவுகள் வரும் என்று நான் நினைக்கவில்லை ~ ஜெகன்மோகன் ரெட்டி தம்பி நாங்களும் தான் டோக்கன் வாங்கிட்டு வரிசையில வந்து பீல் பண்ணுங்க ~ ஜி ?!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தயங்கிய மோடி… சம்மதிக்க வைக்க அமித் ஷா சொன்ன பகீர் காரணம்!
டிஜிட்டல் திண்ணை: நிதிஷ், நாயுடுவை இழுக்க முயற்சி… இந்தியா கூட்டணியின் பிளான் என்ன?