ஆபிஸ்ல வேலையை முடிச்சிட்டு கிளம்புற நேரத்துல, சமீபத்துல கல்யாணம் முடிச்ச நண்பன் ஒருத்தன் கால் பண்ணான்…
“டேய் மாப்ள… கொடைக்கானலுக்கு வந்துருக்கேன்டா. உனக்கு தெரிஞ்ச ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிக்கொடுன்னு” கேட்டான்…
“சரி டா… ஒரு ரூம் தானே, நான் புக் பண்றேன். என்ஜாய் பண்ணுன்னு” சொன்னேன்.
“டேய், 13 பேரு வந்துருக்கோம். 5 ரூம் வேணும்னு” சொன்னான்
“அடப்பாவி ஹனிமூனுக்கு எவன்டா பதிமூனு பேர கூட்டிக்கிட்டு போவான். மொதல்ல கலெக்டர்கிட்ட சொல்லி உங்க குடும்பத்துக்கு மட்டும் இ பாஸ் வாங்க வைக்கனும்டா” சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
எதையும் கேட்காமல் அவங்க ‘பாட்டுக்கு’ தலையசைத்து செல்கிறார்கள் “ஹெட்செட் அணிந்தவர்கள்”!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஹெல்மெட்டை யார் வேணா கண்டுபுடிச்சுருக்கலாம், ஹெல்மெட்டுக்கும் காதுக்கும் இடைப்பட்ட கேப்ல மொபைலை சொருகி பேச முடியும்னு கண்டுபுடிச்சது இந்தியாக்காரன் தான்..
கடைநிலை ஊழியன்
பாஸ்.. இவ்ளோ நாள் நீங்க எல்லாருக்கும் வாழ்த்து சொன்னிங்க.. இன்னைக்கு உங்களுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்றாங்க.. என்ன பண்ண போறீங்க..
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி சொல்ல வேண்டியது தான் திமிங்கலம்..
“தத்துவ போஸ்டா இருந்தால் 80sகிட்ஸ். காதல் போஸ்டா இருந்தால் 2Kகிட்ஸ்ணே”
“ரெண்டுமே இருந்தால்?” “90s கிட்ஸ்ணே”
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிரைவேட் பஸ்ல இருந்து சவுண்ட் ஹார்னையும் ஆடியோ சிஸ்டத்தையும் எடுத்துட்டா எதுவுமே மிஞ்சாது..
மேனேஜர் – லைட்டா தலை வலிக்குது னு நீ வெள்ளிக்கிழமை சொல்லும் போதே தெரியும் டா.. திங்கள்கிழமை நீ லீவ் போட போற னு..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
குணமடைந்தவர்கள் வீட்டில் இருந்த கள்ளசாரயத்தை மீண்டும் குடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதி # கருப்பன் குசும்புக்காரன், பத்து லட்சத்துக்கு ஆசைப்படறான்.
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…