பாலத்துல மட்டும் தான் விரிசலா? அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

கடந்த ஜனவரி மாசம் பிரதமர் மோடி திறந்து வச்ச மும்பை அடல் சேது பாலத்துல விரிசல் ஏற்பட்டிருக்குன்னு இன்னைக்கு செய்தியில பார்த்தேன்…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியறதுக்குள்ள என்டிஏ பாலத்துல எத்தனை விரிசல் விழப்போகுதோன்னு மைண்ட்ல ஒரு யோசனை வந்துட்டு போச்சி…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
சொந்தக்காலில் உட்கார கற்றுக்கொடுக்கிறது யோகா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வீடியோ கேம்ஸ் டிவின்னு கவனம் எங்கிருந்தாலும் சரி, பிரண்ட்ஸோட மும்முரமாக விளையாடிட்டுருந்தாலும் சரி, நம்ம கால்ல செருப்பு போட்ட அடுத்த நொடி தவறாம ‘எங்கப்பா போற..?’ ன்னு கேட்டுறனும்னு குழந்தைகளோட ஆழ்மனசுல போயி யாரோ நம்ப வைச்சுருக்காங்க..
ச ப் பா ணி
எங்கிட்ட எதாவது மறைச்சிருக்கியானு கேட்டாள்.
இல்லைனு சொல்லி மறைத்தேன்
கடைநிலை ஊழியன்
பெரியவன் ஆனதும் நிறைய சம்பாதிச்சு பணக்காரனா வாழனும் னு நினைச்சேன்.. அப்பறம் தான் தெரிஞ்சது.. நம்ம சம்பாதிக்குறதா வச்சு வாழ்றதே பெரிய விஷயம் னு..
ச ப் பா ணி
தீதும் நன்றும் வாய் தாண்டி வாரா
பாக்டீரியா
தெருவுல புதுசா ஒருத்தன் குடி வந்தாலும் சரி ஏரியால புதுசா பானி பூரி கடை போட்டாலும் சரி அந்த ஏரியா போலீஸ்க்கு நியூஸ் போயிரும்… ஆனா எவ்ளோ நாளா கள்ளசாராயம் காச்சி வித்துட்டு இருந்திருக்கானுங்கனு மட்டும் அந்த ஏரியா போலீஸ்க்கு தெரியாது… ஏங்க இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..!?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share