இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ஒரு டீ போட சொல்லிட்டு நண்பன் ஒருத்தன் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்…
கடைக்கு வந்த ஒருத்தரு, “டீ கப்புல போட வேண்டாம், கேன்சர் வருதாம். கிளாஸ்ல போடுங்கன்னு” சொன்னாப்ல…
மாஸ்டர் கிட்ட டீ சொல்லிட்டு நேரா கல்லா பக்கம் போன அந்த ஆளு கடைக்காரு கிட்ட ரெண்டு கோல்டு பில்டர் சிகெரெட் வாங்குனாரு. லைட்டர பத்த வச்சிட்டு வெளிய வந்தவரு மாஸ்டர் முன்னாடி நின்னு தம் அடிச்சிக்கிட்டு இருந்தாரு…
அவரை நம்ம மாஸ்டர் முறைச்சி பார்க்க… சைலண்டா கடைக்குள்ள போயி டீ குடிக்க ஆரம்பிச்சிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
இபிஎஸ் மீது நம்பிக்கை இல்லாததால் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் அதிமுகவினர்: அண்ணாமலை விமர்சனம்
#இன்னும் விரிசல் தொடரும் போல
ச ப் பா ணி
இயர் போனுக்கு எடுத்துச் செல்லும் இடமெல்லாம் சிக்கல்
கடைநிலை ஊழியன்
சொன்னா புரிஞ்சுக்கோ மச்சான்..
நீ பேசுற english எல்லாம் english ‘சே இல்லடா..
ℳsd இதயவன்
விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம் – முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் நியாயமான அரசுய்யா… எந்தளவுக்கு?
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் கள்ளச்சாராயம் குடிச்சு இறந்தவர்களுக்கு 10 லட்சம்?!
‘பள்ளிகளில் ஹிஜாப் அணியிறது அவங்க அடிப்படை உரிமை’ன்னு சொல்லுறதும் அதே பள்ளிகளில் ‘கயிறு,விபூதி போன்றவைகளை தடை பண்ணனும்’னு சொல்லுறதும் ஒரே ஆளுங்களா?
இங்கே நல்லாட்சி பண்ண கலைஞர் உரிமைத் தொகை, ஸ்டாலின் பஸ், காலை உணவு திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற சாஃப்ட் முகம் மட்டும் போதாதுங்க. அதிரடி கைது, குண்டாஸ், என்க்கவுண்டர்னு ஒரு அயர்ன் ஹேண்ட் தேவைப்படுது
ப்ளடி ராஸ்கல் நீங்கல்லாம் குடிக்கணும்னு தான் தெருக்கு தெரு டாஸ்மாக் திறந்து வச்சிருக்கோம் அதெல்லாம் விட்டுட்டு கள்ளச் சாராயமா குடிக்கிற கள்ளச் சாராயம்…??!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மாற்றம்!