புதிய நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவுல பிரதமர் மோடி கைய புடிச்ச நம்ம பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஓட்டு போட்ட மை அழிஞ்சிருச்சா இல்லை இன்னும் அப்படியே இருக்கான்னு செக் பண்ணியிருக்காரு.
இந்த வீடியோவ ஷேர் பண்ண நம்ம நண்பர் ஒருத்தர், “நல்ல வேளை ஓட்டர் ஐடி, எந்த பூத், எத்தனை மணிக்கு வாக்கு செலுத்துனீங்கன்னு கேட்காம போனாரே. அதுவரை நல்லது. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இந்த ஆட்சியை எப்படி கொண்டுபோகப்போறாரோன்னு” சிரிக்கிற ஸ்மைலி அனுப்புனாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
அடுத்தவங்க வாங்கி குடுக்கிற டீக்கு.. சுவை திடம் மணம் அதிகம்
ஜானகிராமன்
கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளார்! – மோடிஜி பரமாத்மா சொல்லியா ஜி?
கடைநிலை ஊழியன்
விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” ~செல்லூர் ராஜு அதிமுக இப்ப இருக்கிற நிலைமைக்கு எம்ஜிஆர் உயிரோடு இருந்தாலே வரமாட்டார் ?!
நெல்லை அண்ணாச்சி
கங்கை மாதா என்னை
தத்தெடுத்துள்ளார்….
# மோடி….
மீண்டும் ” காமெடி “…
ச ப் பா ணி
RCB (ஆண்கள்) அணி ஐ பி எல் கோப்பையை வெற்றி பெற்றால் மட்டுமே மது அருந்துவேன் என்று வைத்துக் கொண்டால் குடிப்பழக்கத்தில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
arulrajmv
கங்கை மாதா என்னை
தத்தெடுத்துள்ளார் – 3.0 ஜீ
# தேர்தல் முடிந்த பிறகும் இந்த performance ha …
ℳsd இதயவன்
பாஜக-வுடன் கூட்டணி வைத்து விட்டோமே என்கிற மன உறுத்தல் எங்களுக்கு உள்ளது..” ~செல்லூர் ராஜூ
மம்மியை மறந்துட்டு மோடி எங்கள் டாடி னு சொன்னவங்க தான நீங்க ?!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றமா? கயல்விழி இல்ல திருமண விழா கிளப்பிய புயல்!