பக்ரீத் பிரியாணி பரிதாபம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு காலையில எழுந்து வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். நம்ம பசங்க எல்லோரும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் பாய்னு ஸ்டேட்டஸ் போட்ருந்தானுங்க…

இது பார்த்த நான், பிரியாணிக்கு ஆசைப்பட்டு காண்டக்ட் லிஸ்ட்ல இருக்குற நம்ம பாய் நண்பர்கள் எல்லோருக்கும், வாழ்த்துக்கள் சொன்னேன்…

நன்றி மாப்ள, நன்றி நண்பான்னு சொன்னவங்க, கடைசி வர பிரியாணி தரேன்னு சொல்லல…

மனச ஆறுதல் படுத்திக்கிட்டு, வேற வழியில்லாம ஹோட்டல்ல போய் பிரியாணி சாப்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

iQKUBAL

தூணிலும் இருக்கும். துரும்பிலும் இருக்கும். என்ன மாப்ள… கடவுளா? கடவுளா??? ஒயின்ஷாப்ல ஸ்டிக்கர் மாமா.

ச ப் பா ணி

தவறு செய்தபின் கேட்கும் நீதிக்கதைகள்.. தண்டனையைவிட கொடுமையானது

செங்காந்தள்

பெரும்பாலனவர்கள் எங்கே இருக்க? என்ற கேள்வியோடுதான் மொபைலில் பேச ஆரம்பிக்கிறார்கள்…!!!

கோழியின் கிறுக்கல்!!

தொடர்ச்சியாக 24 மணி நேரம் கூட வேலை பார்த்திடலாம், ஆனா ஒரு 5 நிமிடங்கள் break எடுத்துட்டு திரும்ப வேலை செய்வது தான் ரொம்ப கடினமாக இருக்கிறது!!

ஜானகிராமன்

+2 fail ஆன மாணவி நீட்-ல 98% மார்க்

# வாழ்க…..” டிஜிட்டல் ” India… ¡!

ச ப் பா ணி

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது மூன்றாம் நாள் பார்க்கிங் பைக்கை வைத்து தெரிந்து கொள்ளலாம்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிகாலையில் ஆட்டோ ரேஸ் – பறிபோன 2 உயிர்கள்!

ராகுல் ராஜினாமா… வயநாட்டில் பிரியங்கா போட்டி!

+1
1
+1
11
+1
1
+1
7
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *