இன்னைக்கு நண்பர் ஒருத்தர் கூட டீ கடைக்கு போயிருந்தேன்…
மாஸ்டர் கிட்ட ரெண்டு டீ ஆர்டர் பண்ணிட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், “என்னுடைய அரசியல் என்ட்ரி ஆரம்பமாகியிருச்சு. 2026-ல அதிமுக தனிப்பெரும்பான்மையா ஆட்சி அமைக்கும்னு சசிகலா சொல்லியிருக்காங்க பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல…
“பார்த்தேன் நண்பா… இது எத்தனாவது என்ட்ரின்னு சொன்னா மீம் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் போட கொஞ்சம் வசதியா இருக்கும்னு” அவருக்கிட்ட சொன்னேன்…
அப்புறம் ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கிட்டே டீ குடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
ஒய்வு நேரம் கிடைத்தவுடன் குழந்தைகள் விளையாட துவங்கிவிடுகின்றனர்.. “போனில்”
ஞாயிற்று கிழமையில் திருமண முகூர்த்தம் காலை 4.30 to 6.00 வைப்பதெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்துகிட்டா போதும் நினைப்பவர்களாக தான் இருப்பாங்க….
ச ப் பா ணி
எப்பங்க பிரச்சாரத்தை ஆரம்பிப்பீங்க
#விக்கிரவாண்டி மக்கள் மைண்ட் வாய்ஸ்
அப்பா முன்னால் நடிக்கும் பெண்கள் சிவாஜிக்கே சவால் விடுபவர்கள்!!
ℳsd இதயவன்
“என்னுடைய Entry தொடங்கிவிட்டது.” – சசிகலா
எது நோ எண்ட்ரி னு எடப்பாடி ஃபோர்டு வைச்ச பிறகுமா ?!
ச ப் பா ணி
other dist: பட்டணத்தான் போகலாமடி பொம்பளே பணம் காசு சேர்க்கலாமடி…
chennai people : என்னாது
other dist : இங்க பாடிக்கிட்டு இருக்கேங்க…
இன்னும் 25 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சிதான்” ~ செல்வபெருந்தகை
அப்ப காமராஜர் ஆட்சியை 25 வருஷம் கிடப்பில் போட போறீங்க னு சொல்லுங்க ?!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய்சேதுபதி மகன்: ‘பீனிக்ஸ் வீழான்’ டீசர் எப்படி?