பதவியேற்பு விழாவா? தெலுங்கு சினிமாவா? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.

“என்ன நண்பா… சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா பார்த்தீங்களான்னு” கேட்டாரு…

“ஆமா நண்பா… அப்படியே தெலுங்கு சினிமா மாதிரி இருந்துச்சு. ஆக்‌ஷன் வேணுமா ஆக்‌ஷன் இருக்கு. எமோஷனல் வேணுமா, எமோஷனல் இருக்கு. காமெடி வேணுமா காமெடி இருக்குங்குற மாதிரி நவரசங்கள் கலந்த ஒரு தெலுங்கு படம் பார்த்த மாதிரி இருந்துச்சுன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

இப்பதான் கணக்கு வரலனு ட்யூசன் போறாங்க பசங்க..

அந்தக்காலத்தில நாங்கெல்லாம் வெண்டைகாய் நிறைய சாப்பிடுவோம் #80’skids

கோழியின் கிறுக்கல்!!
உலகிலேயே மிகப் பெரிய Scam என்றால், அது Home Loan தான்!!
நாடு எங்கபோகுது?
நானும் ஏதோ ஆசைல தனியா SS ஹைதராபாத் போயிட்டேன்.
பாதிக்கு மேல முடியல.
பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டுபோக வச்சிருக்கேன். செருப்படி கன்பார்ம்.
Writer SJB
செய்த தவறை மறைப்பதில் ஆண்கள் திறமைசாலிகள்..! செய்த தவறை தவறே இல்லை என்று நிரூபிப்பதில் பெண்கள் திறமைசாலிகள்..!!
ℳsd இதயவன்
ஓட்டுக்கு பணம் கொடுக்காதது தான் எங்களது பலவீனம் ~ டிடிவி.தினகரன்
டோக்கனாக கொடுக்கிறது தான் பலமா தலைவரே ?!
Writer SJB
ஸ்கூலுக்கு போய் நல்லா படி அப்பத்தான் நீ கலெக்டர் ஆக முடியும்..!
அப்போ நீ நல்லா படிக்கலையா பா..?
ச ப் பா ணி
ஸ்கூல் திறந்ததும் கிடைக்கும் முதல் பலன்..
பெற்றோரின் போன்கள் அடிக்கடி சார்ஜ் போட வேண்டியதில்லை
Niranjan kumar
கூடப் போகிறது காத்திருந்த கூட்டம்
10 நாளில் தெரிந்துவிடும் ஜனநாயக ஆட்டம்..
லாக் ஆஃப்
+1
0
+1
17
+1
1
+1
5
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *