கம்பி கட்டும் கதை: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.

நண்பர், “பிகார் மாநிலத்துல கடந்த 15 நாட்கள்ல 10 பாலங்கள் இடிஞ்சு விழுந்துருக்காம். நியூஸ் பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல..

அதுக்கு நான், “ஆமாமா… எப்படியும் நேரு காலத்துல கட்டுன பாலம்னு கம்பி கட்டுற கதையை விடப்போறாங்கன்னு” கமெண்ட் பண்ணேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

“டயட் கன்ட்ரோல்” என்பது மறைவாய் சாப்பிட்டு வெயிட் போடுவது

கோழியின் கிறுக்கல்!!

காலையில் சீக்கிரம் எழுந்து எங்கயாவது போகணும்னு அலாரம் வச்சா, ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே முழிப்பு வந்துடும், ஆனா, சரியா எழும் நேரம் வரும் போது தூக்கம் சொக்கிட்டு வரும் என்பதே நியதி!!

ச ப் பா ணி

நிற்கும் போது கை கட்டி நிற்பது என்பது தொப்பையை மறைக்கும் உன்னத உக்தி

????????????????????????????
கொடுத்த கடனை நாம திருப்பி கேட்கும்போது எதுக்காக கேக்கிறோம் என்று விளக்கம் எல்லாம் சொல்லி தான் கேக்க வேண்டியதா இருக்கு!

ச ப் பா ணி

கணவனுக்கு முன்பே மனைவி சாப்பிட்டுவிட்டாள் சுகர் மாத்திரையை

ச ப் பா ணி

மேக்கப் என்பது எவ்வளவு நேரம் செய்ய முடியுமோ அவ்வளவு நே(கோ)ரமாக செய்வது.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆற்காடு சுரேஷ் கும்பல்? பகீர் தகவல்கள்!

விக்கிரவாண்டி தேர்தல்… பாமகவின் பெயரை உச்சரிக்காத ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share