நண்பன் ஒருத்தன் இன்னைக்கு கையில 200 ரூபாய வச்சிக்கிட்டு யோசிச்சிக்கிட்டு இருந்தான்.
“என்னடா மாசக்கடைசியில 200 ரூபாய வச்சிக்கிட்டு யோசிச்சிக்கிட்டு இருக்கன்னு” அவன்கிட்ட கேட்டேன்.
“இல்லடா… 150 ரூபாய்க்கு சரக்கு… 4 இட்லி, 1 ஆம்லெட் 45 ரூபா, நாளைக்கு காலையில ஆபிஸ் வர்றதுக்கு பஸ் டிக்கெட் 5 ரூபா. இந்த 200 ரூபாய வச்சி மாச கடைசி நாள் பட்ஜெட் போட்டேன்னு” சொன்னான்.
“டேய்… நிர்மலா சீதாராமனுக்கே நீ டஃப் கொடுப்ப போலையேன்னு” அவன கலாய்ச்சேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
அங்கிள் என அழைக்கும் குழந்தை..சட்டென நினைக்க வைத்துவிடுகிறது நம் வயதை
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஈ-சேவை மையத்துல, என்னென்ன சர்டிபிகேட் வாங்கலாம்ன்ற லிஸ்ட்ல, ‘திருமணமாகதவர் என்பதற்கான சான்றிதல்’ வாங்கலாம்ன்னு இருக்கு.
90’s Kid ன்றதுக்கான பர்த் சர்டிபிகேட் காமிச்சாலே போதுமே, இதுக்கு எதுக்கு அப்ளை பண்ணிகிட்டு..
கடைநிலை ஊழியன்
மாசம் பிறந்ததும்,
வந்துருச்சு மாமா..
சம்பளம்மா மாப்ள.. ?
செலவு மாமா..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
WhatsApp Last Seen டைம் மத்தவங்களுக்கு தெரியாத மாதிரி செட்டங்ஸ் மாத்தி வைச்சுக்கறது ரெண்டே பேர்.
1. நிறைய கடன் வாங்கினவன்.
2. எந்த வேலையும் இல்லாம போன்ல உள்ள செட்டிங்ஸை எல்லாம் நோண்டிட்டே இருக்கறவன்.
நெல்லை அண்ணாச்சி
மேட்டூர் அணை நிரம்பியது…
” உபரிநீர் ” வெளியேற்றம்…
# ஆணையம் ,
பஞ்சாயத்து… பதிலாக
” extra ” அணை கட்டலாமே..!!!
வைராக்கியமாக வாழ கற்று கொடுக்கிறது – மாச கடைசி
Kirachand
லோக்சபா தேர்தலில் 6 தொகுதிகளை பாஜக வழங்கியது.நம் ஆட்கள் தயங்கியதால் ஒரு தொகுதியில் மட்டும் நான் போட்டியிட்டேன்! – ஓபிஎஸ்
ஒரு தோல்விக்கு மேல் நமக்கு தாங்காதுன்னுதான் தயங்கினாரோ?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிலச்சரிவுக்கு பிறகே மத்திய அரசு எச்சரிக்கை… அமித்ஷாவுக்கு பினராயி பதில்!
ஆளுநர் பதவி நீட்டிப்பா? நான் ஜனாதிபதி இல்லை… ஸ்டாலின் பதில்!