டெய்லர் அக்காவா? என்னடா நடக்குது இங்க… அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு காலையில சோஷியல் மீடியாவை ஓபன் பண்ணி பார்க்கும் போது யாரோ ஒரு யூடியூபர் தற்கொலைக்கு முயற்சி பண்ற வீடியோவ பார்த்தேன்.

யாருடா இதுன்னு நண்பன்கிட்ட கேட்டேன், “அடேய் இது தெரியாதா, இவரு தான் பிரியாணி மேன், இவருக்கும் இர்ஃபானுக்கும் மொதல்ல சண்டை. அப்புறம் டெய்லர் அக்காக்கூட சண்டை.

இந்த கேப்புல நம்ம ஏடூடி நந்தா பிரியாணி மேனுக்கு எதிரா ஒரு வீடியோ போட்டாரு. அது செம்ம டிரெண்டாகிடுச்சி. இதனால லைவ் வீடியோவுல பேசிக்கிட்டு இருக்கும்போதே பிரியாணி மேன் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டாருன்னு” கதையா சொல்றான்.

“டேய் நானும் தான் அஞ்சு வருஷமா சோஷியல் மீடியாவ யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த பேருக்கூட கேள்வி பட்டது கிடையாதேடான்னு” சொன்னேன்.

“இதுகூட தெரியாம நீயெல்லாம் ஏன் சோஷியல் மீடியாவ யூஸ் பண்றன்னு” கேட்குறான்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

வசந்த்

நம்ம இவ்வளவு ஏழையா இருந்தும் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போக முடியலையேனு கஷ்டமா இருக்கு பாட்டி

வருத்தப்படாத இன்னும் ரெண்டு மாதம் கல்யாணம் நடக்குமாம் முயற்சி பண்ணுப்பா…

Kirachand

மைக் அணைக்கப்படவில்லை; மம்தா பானர்ஜி கூறுவது ஆதாரமற்றது! – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நீங்க சொல்றதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா ஜி?

நெல்லை அண்ணாச்சி

அடுத்த மாதம் மோடிஜி

” உக்ரைன் ” …பயணம்

# ஜி…அப்படியே நம்ம

…” மணிப்பூர் ”

கடைநிலை ஊழியன்

to july –

ஆமா.. இப்ப எதுக்கு டா இவ்ளோ அவசரமா ஓடிட்டு இருக்க..

balebalu

லோக்சபா தேர்தலில், ஆறு தொகுதிகளை பா.ஜ., வழங்கியது. நம் ஆட்கள் தயங்கியதால், ஒரு தொகுதியில் மட்டும் நான் போட்டியிட்டேன் – ஓபிஎஸ்

ஒரு தொகுதிக்கே ஒரே பெயர்ல 6 பேர் போட்டி

இதுல

இன்னும் 6 தொகுதி ன்னா எத்தனை பேர் போட்டிக்கு வந்திருப்பாங்களோ

ArulrajArun

ஏன்ணே அவனை அடிச்சிங்க

பின்ன என்னப்பா

தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின கைது பண்ணிட்டாங்களே

இனிமே தியேட்டர்ல பாப்கார்ன் , கூல்டிரிங்ஸ் விலை குறைஞ்சிடுமானு கேக்குறான்ப்பா …

balebalu

அடம் பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினி- செய்தி

லேட்டா போனா ஸ்கூல் ‘கேட்’ ட்டுக்கு வெளியே

நிக்க வெச்சுடுவாங்களோ ன்னு பயமோ

ச ப் பா ணி

யூசர் நேம் இடத்தில், பாஸ்வேர்டு டைப் செய்வதெல்லாம்

மானத்தை ஆன்லைனில் அப்லோடு செய்வது போல

மயக்குநன்

திமுக ஆட்சி, திராவிட மாடலா அல்லது ராமரின் மாடலா?- சீமான் கேள்வி.

’ராமசாமி மாடல்’ பாஸ்..!

 

Mannar & company™

ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?

பின்னே என்னப்பா..

நானும் ப்ளு டிக் வாங்கிட்டேன் அடுத்த மாசத்திலேருந்து 4 லட்சம் ரூபாய் வரும் அதனால இன்னிக்கு ஒரு லட்சம் இருந்தா கடனா கொடுங்கன்னு கேட்குறாம்பா!

கோழியின் கிறுக்கல்!!

நடிகர், நடிகைகள் கொடுக்கும் Health tips எவ்வளவு மூடத்தனமாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பும் மக்கள், மருத்துவர்கள் கூறும் உண்மைகளை கடுகளவும் நம்புவதில்லை!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவசாயத்தில் நவீனம்: தமிழகத்தில் சிங்கப்பூர் அரசு செய்யப் போகும் அசத்தல் திட்டம்! 

விதை நாங்க போட்டது: 15,000 ஓபிசி மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்… ஸ்டாலின் ஹாப்பி!

+1
2
+1
14
+1
1
+1
9
+1
0
+1
4
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *