நண்பன் ஒருத்தன் இன்னைக்கு காலையில கால் பண்ணி, “மாப்ள ராயன் படத்துக்கு போலாமான்னு” கேட்டான்.
“சரிடா… யாரு புரொடக்ஷன்னு” கேட்டேன்.
“சன் பிக்சர்ஸ்னு” சொன்னான்.
“அடேய் அடுத்த மாசம், இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து ஒரு மாதமே ஆன ராயன் திரைப்படம் வெளியாகிறதுன்னு சன் டிவியிலேயே போட்ருவான்னு” சொன்னேன்.
டென்ஷனாகி போனை வச்சிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
நாம துக்கத்திலிருக்கும் போது அடுத்தவங்க துக்கக் கதையை கேட்டு தன்னை மறப்பது ஒரு சுகமான சுமை
இப்பெல்லாம் “Uncle” என்றழைப்பதை விட “அண்ணா” என்றழைப்பது, ஆறுதலாக இருக்கின்றது!!
ℳsd இதயவன்
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்துள்ளோம் ~ அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்
இந்தியா பதிலுக்கு கறுப்பு இன மக்களை எப்படி நடத்துனும் னு உங்களுக்கு எடுத்துரைத்து இருப்பாங்களே ?!
ச ப் பா ணி
இணையக்கூடாதது என்னவோ Week end ம் Month end ம்
Classroom ல கொஞ்சம் பேசினாலும் boardல பெயர் எழுதிருவான் கிளாஸ் லீடர் …… இப்ப எந்த courts Judge-அ இருக்கானோ தெரியல..!!!
ச ப் பா ணி
அவள் நினைவு என்பது பெல்ட் போடாத பேக்பெய்ன் மாதிரி..எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் ஒருவர் கைது!
TNPL-ல் விளையாட வாய்ப்பு மறுப்பு… கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை!