இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…

அங்க இருந்த டிவியில நாடாளுமன்றத்துல ராகுல் காந்தி சிவன் படத்தை காட்டி ஆவேசமா பேசிக்கிட்டு இருந்த வீடியோ ஓடிக்கிட்டு இருந்துச்சு.

இதை பார்த்த நம்ம நண்பர், “மோடி கனவுல கூட இப்படிலாம் நமக்கு நடக்கும்னு நினைச்சிக்கூட பார்த்துருக்க மாட்டாரு. ராகுல் பேசுன பேச்சுக்கு இன்னைக்கே ஸ்பீச்ச பிரிபேர் பண்ணி, நைட்டு ஃபுல்லா மனப்பாடம் செஞ்சு நாளைக்கு வந்து பேசுவாப்லன்னு” கமெண்ட் அடிச்சாரு.

நீங்க அப்டேட் பாருங்க…

ச ப் பா ணி

ஏடிஎம்மில பின் நெம்பரை கூட நாலு பேருக்கு தெரிய அடிச்சிடலாம்.அந்த ஸ்க்ரீனில் காட்டும் பேலன்சை தான் எவனாவது பார்த்திடுவானோன்னு மறைக்க வேண்டியுள்ளது.

கோழியின் கிறுக்கல்!!
Mobile phoneல பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது, MultiTaskingல் சேராது, மரண Taskingல் தான் சேரும்!!

ச ப் பா ணி

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருப்பது வாட்ஸ் அப் குரூப்பில் மட்டும்தான்

கோழியின் கிறுக்கல்!!

இதயம் சொல்வதை கேட்பவர் சிலர்,

மூளை சொல்வதை கேட்பவர் சிலர்,

ஆனால் மனைவி சொல்வதை கேட்பவரே பலர்!!

ச ப் பா ணி

நல்லா இருக்கீங்களா? எனும் கேள்விக்கு ‘உங்க அளவுக்கு இல்ல’ என்பதும் ஒருவித குரூர பதில்தான்

Mannar & company™

மழைக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுக்கிற மாதிரி வெயிலுக்கு சிக்னலுக்கு சிக்னல் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது!

ச ப் பா ணி

என் பிரேக்கிங் நியூஸில் வரும் விளம்பர இடைவேளை நீ

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடிக்கு மெஜாரிட்டியா? மாநிலங்களவையில் திருச்சி சிவா காட்டம்!

ஈரோடு கிழக்கு போல ஆகக்கூடாது… விக்கிரவாண்டி ஃபார்முலா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share