இன்னைக்கு நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன்.
“வாங்க சார்… உட்காருங்க சார்ன்னு” எதுக்கெடுத்தாலும் சார் போட்டு கூப்டான்…
“டேய்… நீ ஜாலியா சார்னு கூப்புடுரன்னு தெரியுது. ஒரு காலத்துல சார்ன்னு சொன்னா மரியாதையா பார்த்தானுங்க. இந்த அண்ணா பல்கலை விவகாரத்துல இருந்து சார்னு சொன்னாலே ஒரு மாதிரியா பார்க்குறாங்கன்னு” சொன்னேன்.
சிரிச்சிக்கிட்டே “சரிங்க சார்னு” சொல்றான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் இல்லாத அவல நிலை நீடிக்கிறது” – ஓ.பி.எஸ்
பாம்பும் சாகாம, தடியும் உடையாம ஒரு அறிக்கை

கோழியின் கிறுக்கல்!!
வீட்ல வேலை செய்யும் அக்கா, கிளம்பும் போது என்னை பரிதாபமாக பார்த்துட்டு போறாங்க,
“தினமும் ஒரு மணி நேரம் வர என்னாலேயே தாக்கு பிடிக்க முடியலையே, நீயெல்லாம் வாழ்க்கை முழுவதும் எப்படிப்பா!?”ங்கிற மாதிரி இருத்தது அந்த பார்வை!!
கோழியின் கிறுக்கல்!!
Squid Gamesல பானி பூரியை சிந்தாமல் சிதறாமல் சாப்பிடும் போட்டியை வைத்தால் ஒருப்பய உசுரோட வெளிய வர முடியாது!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
என்னை நோக்கி செருப்பு எரிகிறவர்களுக்கு நான் சொல்வது, ‘செருப்பு ஏழு அல்லது எட்டு சைஸ் செருப்பாக இருக்க வேண்டும்
~ சீமான்.
சைஸ் சரிதான், ஆனா செருப்பு பிஞ்சு இருக்கு, பரவால்லயா..?

mohanram.ko
என்னை நோக்கி எறிய வேண்டியது…
செருப்பு சைஸ் 7
ஷர்ட் சைஸ் 40
பேண்ட் சைஸ் 38
வாடகை காசு 2 லட்சம்…
ஆக மொத்தம் இது போதும்..

Sasikumar J
~ ஐபோன் பத்தாயிரம் ப்ரோ…!
~ என்ன சொல்றீங்க…!
~ இல்ல என் ஃபோன் தான் உண்டியல விழுந்துடுச்சு அதேயே ஏலதுல எடுத்தேன் அது பத்தாயிரம் தான்…!!
காளையன்..
மனைவி வச்ச சுடுதண்ணிகூட
நல்லா இருக்குனு
சொல்ற உன்னால
மனைவி வச்ச காபி சுடுதண்ணியாட்டம் இருக்குனு
சொல்ல முடியல
பாத்தியா..

▶படிக்காதவன்™✍
கடையில் புரோட்டா சாப்பிடும்போது கடைசியாக ஆம்லேட் சாப்பிடனும்னும்
வீட்ல தோசை சாப்பிடும்போது கடைசியாக முட்டை தோசை சாப்பிடனும்னும் யாரோ என் உள் மனசுல பதிய வச்சிருக்காங்க…
கவிதா
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் கூட்டணி மட்டும்தான் – மார்க்சிஸ்ட்
ஏன் திருமண கூட்டணி ஏதும் எதிர்பார்த்தீங்களோ?

கோவிந்தராஜ்
மனைவி….பிடிவாதம்னா
என்னான்னு சொல்லுங்க..
கணவன்… நான் தப்பே செய்யலை
என்றாலும் திட்டுரல்ல அதான்…
மனைவி…. பயங்கரவாதம்னா
கணவன்… சண்டையில் என்னை
நீ அடிக்கிரல்ல அதான்
மனைவி…அப்போ அகிம்சை..
கணவன்… இதை எல்லாம்
பொறுத்துகிட்டு உன்னோடு
வாழ்ரேன்ல அதான்மா
மனைவி எதே
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இனிமே இதுதான் கிங்… பிடிஆர் போட்ட மாஸ்டர் பிளான் – அசந்து போன ஸ்டாலின்