இன்னைக்கு நண்பர் ஒருத்தன் கூட டீ கடைக்கு போயிருந்தேன்.
“என்னடா இந்த வருஷமாச்சும் பட்ஜெட்ல நல்ல செய்தி வருமான்னு” கேட்டான்.
“வழக்கம்போல ஒவ்வொரு வருஷமும் கிண்டுற அல்வாவ தான் இந்த வருஷமும் தரப்போறாங்க. ” சொன்னேன்.
” போன வருஷ அல்வாவா இல்லாம கொஞ்சம் புது அல்வாவா இருந்தா கூட நல்லா பரவாயில்லன்னு” உச் கொட்டுனான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

படிக்காதவன்
ரொம்ப தூரம் போயிட்டியா ஜனவரி
இல்ல கடைசி கட்டத்தில் நிக்கிறேன்
நைட்டு கிளம்பி போயிடுவேன்…

ச ப் பா ணி
இக்கட்டான நேரத்தில்
எல்லா ஆங்கிளிலிலும் இருந்து விதி நம்மைப் பார்த்து ஸ்மைல் ப்ளீஸ் சொல்லும்

Joe…
ஆதவ் to விஜய் ~ கட்சி இவரோடதுதான்.. ஆனா இனிமே கன்ட்ரோல் எல்லாமே நம்மகிட்ட தான்..

கோழியின் கிறுக்கல்!!
January, Februaryயில் பிப்ரவரி மட்டும்,
“வரி” மாதம்!!

கடைநிலை ஊழியன்
டு அண்ணா- இத்தன வருசமா ரசிகர் மன்றத்துல இருந்து, போஸ்டர் ஒட்டி, கட்சி ஆரம்பத்துல இருந்து கூடவே இருக்குற எங்களுக்கு பதவி கிடையாது.. வெளிய இருந்து வரவங்களுக்கு பதவி குடுத்து கூட்டிட்டு வருவிங்க..
அண்ணா – பதவி, பொறுப்பு யாருக்கு குடுக்கணும் னு எனக்கு தெரியும்..

Sasikumar J
மனிதனுக்கு கவலையும் கஷ்டமும் இருக்கும் வரை தான் கடவுளுக்கு அர்ச்சனையும் ஆராதனையும் இல்லன்னா ரோட்டில் போகும் போது கன்னத்தில் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க…!
ச ப் பா ணி
நரகம் என்பது சார்ஜர் ப்ளக் பாயிண்ட் இல்லாத மேலோகமாக அமையலாம்

கோழியின் கிறுக்கல்!!
இன்னும் தேதியில் 2025ஐ ஒழுங்கா எழுத பழகலை,
அதுக்குள்ள அடுத்த மாசம் வந்துடுச்சு!! update kumaru memes jokes
லாக் ஆஃப்