இன்னைக்கு நண்பன் ஒருத்தன காலையில டீக்கடையில பார்த்தேன்.
“என்னடா ஜிம் ஜாயின் பண்ணிட்ட போல. ஸ்டேட்டஸ் போட்டு கலக்குறியேன்னு” சொன்னேன்.
“ஆமா மாப்ள. நியூர்ல ஏதாவது புதுசா ரெசல்யூஷன் எடுக்கனும்ல. அதான் ஜிம்ல சேர்ந்துட்டேன்னு” சொன்னான்.
“சரி… இன்னைக்கு ஜிம்க்கு போகலையான்னு” கேட்டேன்.
“கொஞ்சம் டயர்டா இருந்துச்சு. அதான் போகமுடியலைன்னு” சொன்னான்.
அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோவிந்தராஜ்
ச்சை இந்த வர்சம் நல்லால்ல ஒரு நாள்லயே போர் அடிக்கிது.. ..2026 எப்ப வரும்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இன்னைக்கு வியாழக்கிழமை தானே.. ஆனா பாருங்க.. நேத்து லீவுன்றதால இன்னைக்கு திங்கட்கிழமை மாதிரியே ஒரு பீலிங்கு..

காளையன்..
ஸ்மார்ட்போன்
வந்ததுக்கு
அப்புறம் எவ்வளவு
பெரிய “கியூ”வா
இருந்தாலும் பொறுமையா இருக்க
பழகி கிட்டாங்க..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மாதம் 1000 ரூபாய் யாருக்கு வேண்டும்..? பெண்களின் பாதுகாப்பே முக்கியம் – சவுமியா அன்புமணி காட்டம்.
யோவ் ராமதாஸ்.. முகுந்தனோட அம்மாவுக்கும் கட்சி பதவி குடுத்து எங்க அக்காவை கட்சில இருந்து ஓரங்கட்ட பாக்கறியா..? பாரு எப்படி பதர்றாங்கன்னு..

✒️Writer SJB✒️
கேஸ் தீர்ந்து போச்சு சிலிண்டர் மாத்தி குடுங்க,,
என்னால சிலிண்டர தூக்க முடியாது,,
அப்போ உருட்டுங்க,,
உன்ன போல அழகிய நான் பார்த்ததே இல்ல..!!!

கடைநிலை ஊழியன்
எதுக்கு டா அழுகுற.. வருஷத்துல முதல் நாள் ஆபீஸ்க்கு போகும் போது சந்தோஷமா போகனும்.. புரியுதா..
புரியுதுது………….
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி – ரகுபதி காட்டம்!