இன்னைக்கு அஜித் ரசிகர் நண்பர் ஒருத்தன சந்திச்சேன்.
“என்னடா விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதது உனக்கு வருத்தமாயில்லையான்னு” கேட்டேன்.
“விடாமுயற்சின்னா என்ன? எந்த தடை வந்தாலும் அந்த தடையெல்லாம் தாண்டி ஜெயிக்குறது தான் விடாமுயற்சி. அதனால படம் பல தடைகளை தாண்டி தான் பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸாகும்னு” ஒரு புது விளக்கம் கொடுத்தான்.
“எப்படியெல்லாம் சமாளிக்கிறான்னு” மனசுல நினைச்சிக்கிட்டு, “சரிடா அந்த படம் ரிலீஸாகிரும்னு விடாமுயற்சியோட காத்திருன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
மூடிய கடைகளை எல்லாம் கண்டு வாடிப்போனார் குடிமகன்

நெல்லை அண்ணாச்சி
தமிழக ஆட்சி அதிகாரத்தில்
” பங்கு “கிடைப்பது எப்போது.?
ஆடிட்டர் குருமூர்த்தி ஆவேசம்..!!
யார்றா…சிரிச்சது….!!!

கோழியின் கிறுக்கல்!!
வெட்டி வைத்த ஆடு தீரும் போது தான் கறிக்கடைக்காரருக்கு,
கரி நாள்!!

கடைநிலை ஊழியன்
6:40 சம்பவம் இருக்கு..
என்னது.. ட்ரைலர் வருமா.. ?
அதான் இல்ல.. 6 மணிக்கு காணும் பொங்கல் வாழ்த்து வரும்..

Mannar & company™🕗
பொங்கலுக்கு இரண்டு நாட்களில் ரூ.453 கோடிக்கு விற்பனை ஆகிருக்கு மாமா!
என்ன மாப்ள கரும்பா?!
கரும்பு இல்ல மாமா.. ரூ.453 கோடிக்கு மது விற்பனை ஆகிருக்காம்!!

Sasikumar J
~ ஏன் அண்ணா அடிச்சீங்க…!
~ பொங்கலுக்கு அப்பறமா கரிநாள் மட்டும்தான் வருது ஏன் அண்ணா அந்த மீன் நாள் எல்லாம் வராலன்னு கேட்கிறான்…!
ச ப் பா ணி
பொங்கலே முடிஞ்சு போச்சு..
ஆனா வீட்ல வச்ச பொங்கல் இன்னும் முடியலயே
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறைக் கைதிகளை மகிழ வைத்த மெளன ராகம்!
தை மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி