எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடையில பேசிக்கிட்டு இருந்தேன்.

“மாப்ள… ரெண்டு நாளா டிவியில ஜல்லிக்கட்டு பார்த்து பார்த்து காளையை அடக்கனும் போல இருக்குதுன்னு” சொன்னேன்.

“டேய்… நான் டெய்லி காளையை அடக்குறேன்டான்னு” சொன்னான்.

”என்ன மாப்ள… உங்க வீட்ல மாடு இருக்கான்னு” கேட்டேன்.

“அதான் என் பொண்டாட்டி இருக்கால்ல… அவகூட தினமும் சண்ட போட்டு மல்லுக்கட்டுறதே காளை மாட்ட அடக்குற மாதிரி தான்னு” சொல்றான்.

பார்க்கவே பாவமா இருந்துச்சு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J

புது பேனா வாங்கினா எப்படி எழுதி பார்க்கணும் அதே மாதிரி தான் புது டிரஸ் போட்டா ஃபோட்டோ எடுக்கணும்னு அப்படின்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு..!

▶படிக்காதவன்™✍

எரும மற்றும் எருமமாடு என அழைக்கப்பெறும் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்…

vijaychakkaravarthy

யார்டா நீ… ரேஷன்்கடைல வந்து கரும்பு, அரிசி, வெல்லம்லா தனியா வேணாம்… direct ah நீங்க சர்க்கர பொங்கலாவே தாங்கன்னு சண்ட போடுற…

செங்காந்தள்

திரையரங்குகளில் தோல்வி அடைந்த திரைப்படங்கள் தொலைக் காட்சிகளில் ‘சூப்பர் ஹிட்’ திரைப்படங்களாகி விடுகின்றன…!!!

Mannar & company™????

எதாவது விஷேசம்னா பிரியாணிதான் சாப்பாடு,
அதுவே சாப்பாடு செய்வதுதான் விஷேசம்னா அதுதான் “பொங்கல்”!

Sasikumar J

வெண்பொங்கல் ல எப்படி மிளகு (கஷ்டங்கள்) அதிகமாகவும், முந்திரி எப்படி (மகிழ்ச்சி) குறைவாகவும் வரும் அது போல தான் இந்த வாழ்க்கை…!

Mannar & company™????

குடும்பத்துக்காக ‘மாடா’ உழைக்கிறேன்,
‘ஓடா’ தேய்கிறேன் என்பவர்களுக்கு
“இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்”!!

குருநாதா

ராகுல்: ரெண்டு பொங்கல் ஏன் வைக்கிறோம் தெரியுமா ?

கோகுல்: தெரியலையே டா

ராகுல்: ஒன்னு சக்கரைப்பொங்கல்
இன்னொன்னு சக்கரை நோயாளிக்கான பொங்கல்

சிரிங்க சிரிங்க சந்தோசமா இருங்க

லாக் ஆஃப்

சென்னை சங்கமம் தான் எங்க அடையாளம்… நெகிழும் கலைஞர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel