நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பர் ஒருத்தனுக்கு கால் பண்ணி பொங்கலுக்கு உங்க வீட்டுக்கு வரட்டுமாடான்னு கேட்டேன்.

“என்னடா கேள்வி இது. வாடா… என் பொண்டாட்டி இப்ப தான் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படின்னு யூடியூப்ல வீடியோ பார்த்து செஞ்சிட்ருக்கா. வா, சேர்ந்து சாப்பிடுவோம்னு” சொன்னான்.

“இல்ல… பரவாயில்ல டா… நீனே சாப்பிடு. எனக்கு வேற ஒரு வேலை இருக்கு. நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வர்றேன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

யூடியூப் மட்டும் இல்லன்னா பல வீட்ல பொங்கலே வைக்க மாட்டங்க போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Dr. M. A. N. Loganathan

லைக்கா டூ சுந்தர் சி:

இது மாதிரி வேற ஏதாவது படம் எடுத்து ரிலீஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா புரோ..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

உலகத்துலயே ஆகச்சிறந்த நடிப்பு எது தெரியுமா?

கடன் வாங்கினவன் கிட்ட போன் பண்ணி காசை கேட்க பயந்துட்டு (பண்ணாலும் எடுக்க மாட்டான்) மெசேஜ் அனுப்ப, அவன் preview ல பாத்துட்டு மெசேஜை பாக்காத மாதிரி நடிக்க, நாமும் அவன் மெசேஜ் பாக்கல பாத்த உடனே தந்துருவான்னு நம்மை நாமே ஏமாத்திக்கறதும்தான்

ச ப் பா ணி

பொங்கல் பண்டிகை நல்லாயிருந்துச்சா..

சரி ஊருக்குப் போக தக்கலில் டிக்கெட் பாரு

கடைநிலை ஊழியன்

நெல்சன் – என்ன ஜி.. ஜெயிலர்’ல வர பிட்டையும், கூலி’ல வர பிட்டையும் சேத்து போட்டு வச்சுருகீங்க..

அணி – வேற தெரிஞ்சா போட மாட்டேனா ஜி..

#Jailer2Announcement

ச ப் பா ணி

ஊரே தமிழர் திருநாளை கொண்டாடுது.. நீ ஏப்பா சோகமா இருக்க?

நான் பீகாரிங்க

கடைநிலை ஊழியன்

என்ன இது.. தோழி இன்னும் saree போட்டோ போஸ்ட் பண்ணகாணும்..

ச ப் பா ணி

“தெரியாம தான் கேட்கிறேன்”
என்பது தெரிந்து கொண்டே
கேட்பதற்கான கொட்டேசன்

லாக் ஆஃப்

தை மாத நட்சத்திர பலன்கள்: மகம்

அண்ணா பல்கலையைத் தொடர்ந்து புதுச்சேரி பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share