மனசுல பெரிய அஜித் குமாருன்னு நினைப்பு… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு அஜித் ரசிகர் நண்பன் ஒருத்தன் கால் பண்ணான்.

“மாப்ள… தலய பார்த்தல்ல… கார் ரேஸுல சும்மா தெறிக்க விடுறாப்ல… எங்களுக்கு விடாமுயற்சிலாம் வேணாம். இந்த பொங்கலுக்கு தலயோட வெற்றியே போதும்னு” சொன்னான்.

“டேய்… நான் வெளிய இருக்கேன். அப்புறம் பேசுறேன்னு” சொன்னேன்.

“நானும் அடுத்த மாசத்துல இருந்து கார் ஓட்ட கத்துக்கிட்டு தல மாதிரி ரேஸர் ஆகப்போறேன்னு” சொன்னான்.

“சரி… நியூயர்ல இருந்து ஸ்கூட்டி ஓட்டப் போறேன்னு சொன்னியே பழகிட்டியான்னு” கேட்டேன்.

“இல்லை… இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் பழகிட்டு இருக்கேன்னு” சொன்னான்.

“தம்பி… ஆசப்படலாம், பேராசைப்படக்கூடாதுன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

உனக்கு மொத்தம் எத்தனை அண்ணன்?

உன்னோடு சேர்த்து மூன்று!!

ச ப் பா ணி

நாம் என்ன சேனல் பார்க்க வேண்டும் என்பதை ரிமோட்டை கையில் வைத்திருப்பவரே முடிவு செய்கிறார்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அஜித் டீம், கார் ரேஸ்ல மூணாவதா வந்துருக்குன்னு ஊரே சந்தோசமா இருக்கு.. நீ ஏன்டா சோகமா இருக்க..?

நாங்க தான் சார் முதலாவதா வந்த டீம்..

Mannar & company™????

“கரும்பு சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாமதான்”னு சொல்றளவுக்கு வந்தாச்சு,
இப்ப உள்ள பசங்க யாரும் கரும்பு தின்ன மாட்டேங்குறாங்க!!

amudu

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையிலும் கூட, ஆண் பொம்மை மேலும் கீழும், பெண் பொம்மை இட,வலமாகவும் தான் தலையாட்டும் போல.

செங்காந்தள்

விசேஷ நாட்களில்தான் தனிக்குடும்பங்களும் கூட்டுக் குடும்பங்களாகின்றன…!!!

Mannar & company™????

உங்கள் கனவு இல்லம் சின்னதாக இருக்கட்டும்.

ஏன்.. எல்லோரும் கனவு வீடு பெருசா இருக்கணும்னு சொல்லுவாங்க நீங்க என்னன்னா..

லாக் ஆஃப்

அயலகத் தமிழர் தினம்… இத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமா?

அருள்தாஸ் பற்றி அந்த விஷயம் தெரியுமா? – இன்ட்ரஸ்டிங் தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel