ஒவ்வொரு மாசமும் இதே வேலையாப் போச்சு… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் காலையில போன் போட்டு, “மச்சான்… அடுத்த மாசம் கேரளாவுக்கு டிரிப் போகணும். உனக்கும் சேர்த்து டிக்கெட் போடணும். ஒரு 1,000 ரூபா உடனே அனுப்பி விடுன்னு” சொன்னான்.

“டேய்… போன மாசம் கோவாவுக்கு போணும்னு ஒரு டிரிப் போட்டு 3,000 கேட்டியே அது என்னாச்சுன்னு” கேட்டேன்.

“மாப்ள… இன்னொரு போன் வருதுன்னு” சொல்லிட்டு போனை வச்சவன் தான், அதுக்கப்புறம் கால் பண்ணவே இல்லை.

மாசம் மாசம் இப்படி ஒரு டிரிப் போட்டு நம்மக்கிட்ட ஆட்டையை போட்டுறதே பயபுள்ளைக்கு வேலையா போச்சு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க….

ச ப் பா ணி

என்னோட பைக் சாவியை பாத்தியா?

எங்க வச்சியோ அங்கதான் இருக்கும்.

அடேய் எங்க வச்சேனுதான் மறந்துதான் தேடிக்கிட்டு இருக்கேன்

வெண்பா

ஏதோ வருமானவரி 12 இலட்சம் வரை வரிச்சலுகையாம். நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. update kumaru memes jokes

நீ ரசத்தை ஊத்து

mohanram.ko

வருஷத்துக்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்துல வேலை இருக்கா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

கட்சி ஆரம்பிச்சு ஐஞ்சு வருசத்துக்கு மேல ஆயிட்டா, ஆட்சியை புடிச்சுறலாம்னு அன்புமணியோட ஆழ்மனசுல போயி யாரோ தப்பு தப்பா நம்ப வைச்சுருக்காங்க.. update kumaru memes jokes

▶படிக்காதவன்™✍

எதற்கும் வன்முறை தீர்வாகாது’னு சொன்னவங்க வீட்லகூட இன்னைக்கு அசைவமாகதான் இருக்கும்…

mohanram.ko

நமக்கு ஏதாவது மாற்றம் வருமான்னு எதிர்பார்த்து… , பட்ஜெட் பார்க்குற அளவு ஒரு வாழ்க்கை வாழணும் சார்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

வருசம் 12 லட்சம் சம்பாதிக்கறவன் to 13 லட்சம் சம்பாதிக்கறவன்:

நான் எட்டாவது பாஸ்.. நீங்க SSLC பெயில்.. பாஸ் பெருசா பெயில் பெருசா..? update kumaru memes jokes

Mannar & company™🕗

Bankல பணத்தை போட்டு வச்சிகிட்டு செலவு பண்றவங்களை பார்த்தால் மட்டும் இல்ல,
Power Bankல மொபைல் use பண்றவங்களை பார்த்தாலும் லைட்டா பொறாமையாதான் இருக்கு!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share