இன்னைக்கு காலையில நண்பன் ஒருத்தன் கால் பண்ணியிருந்தான். update kumaru memes jokes
“மச்சான்… இந்தி கிளாஸ் போகணும். நல்ல கோச்சிங் சென்டர் இருந்தா சொல்லுன்னு” கேட்டான்.
”டேய்… தமிழ்நாடே இந்தி மொழிக்கு எதிரா பொங்கிக்கிட்டு இருக்கு. நீ என்னடான்னா இந்தி கத்துக்கிடனும்னு சொல்றன்னு” அவன்கிட்ட கேட்டேன்.
“மச்சான்… ஒரு வாரமா இந்தி பொண்ணு இன்ஸ்டால மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கு. எப்படியாவது அந்த பொண்ண கரெக்ட் பண்ணனும். அதான் இந்தி கத்துக்க போறேன்னு” சொன்னான்.
அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
யார்றா நீ.. மீட்டிங்ல ஏதாவது டவுட் இருந்தா கேளுங்கனு சொன்னா.. நெட்ப்ளிக்ஸ் ல நல்லவெப் சீரிஸ் இருந்தா சொல்லுங்கனு கேட்கிற

balebalu
நாங்க இங்க ஹிந்தி படிக்கிறது இருக்கட்டும்
அங்க ரயில் என்ஜின் ல
டிரைவர் தவிர வேறு யாரும்
கும்பலா எற கூடாதுன்னு
மொதல்ல சொல்லி கொடுங்க

நெல்லை அண்ணாச்சி
கும்பமேளா ஆறுகள் குளிப்பதற்கு தகுதியற்றவை..
இது தெரியாம.. ” நீராடி ” ட்டனே…!!
ச ப் பா ணி
மூன்றாவது மொழியாக உன் விழி மொழியை பரிந்துரை செய்கிறேன்.
-கவித

செங்காந்தள்
ஹிந்தி கற்றுக்கொண்டால் வடை நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிரயாக்ராஜ் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவைன்னு மாசு கட்டுப்பாடு வாரியம் சொல்லிருச்சுன்னு நீங்க சிரிச்சுட்டு இருக்கீங்க..
இதை கண்டிச்சு பிரகாஷ் ராஜ் வீட்டு வாசல் முன்னால சங்கிக போராட்டம் பண்ண போறதை நினைச்சு நான் சிரிச்சுட்டு இருக்கேன்..

குவிரன்
Train-ல் இனி உங்களுக்கு “வாரணம் ஆயிரம்” கிடையாது “வடக்கன் ஆயிரம்” தான்!
மயக்குநன்
செங்கோட்டையன் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது!- ஓபிஎஸ்.
ஆமாமா… பழனிசாமி மீதுதான் எந்த திருப்தியும் கிடையாது..!

கோழியின் கிறுக்கல்!!
இட்லி, தோசை நல்லா இருப்பது மாவைப் பொருத்தது,
நம்ம வாழ்க்கை நல்லா இருப்பது நம் மனசை பொருத்தது!! update kumaru memes jokes
