இதெல்லாம் நமக்கு தேவையா கோபி… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பர் ஒருத்தர் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

நண்பர், “அண்ணா எழுதி வச்சிக்கோங்கனா… 200 தொகுதியில திமுக தலைமையிலான கூட்டணி டெப்பாசிட்டை இழக்கும்னு அண்ணாமலை சொல்லிருக்காரு பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல.

“இப்படி தான் நாடாளுமன்ற தேர்தல்ல 25 சதவிகிதம் வாக்கு சதவிகிதம் வாங்குவோம், தென் தமிழகத்துல ஒரு திராவிட கட்சிகள் கூட ஜெயிக்காது. எழுதி வச்சிக்கோங்கன்னு சொன்னாரு. ஆனா ஒன்னும் நடக்கல. இப்படி இவரு சொல்றதெல்லாம் எழுதி எழுதி வச்சு என் பேப்பர் தான் வேஸ்டா போகுதுன்னு” சொன்னேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

உண்டியலில் விழுந்த Iphone கோயிலுக்கு சொந்தம்

என்னோட கடன் பத்திரம் உண்டியல்ல போட்றேன் லோன் கட்டுவிங்களா யுவர் ஆன


ச ப் பா ணி

இன்னிக்கு sunday வ நினைச்சு சந்தோசப்படுறதும்.. நாளைக்கு Monday வ நினைச்சு வருத்தப்படுறதும் ஒரே ஆளா

Sasikumar J

ஏன் திமிங்கலம் படம் பார்க்க போறதே படம் நல்லா இருக்கோ, இல்லையோ பாப்கார்ன் நல்லா இருக்கும் அப்படின்னு ஒரு திருப்தி இருக்கும் இப்ப அதுக்கும் ஜிஎஸ்டி 18% போட்டா எப்படி தியேட்டர் பக்கம் போறது…!

Sweeto ராட்ஸ்

10 முட்டை வாங்கிட்டு வரப்ப 2 உடைஞ்சா உடனே ஆம்லெட் போட்டு சாப்டனும். அய்யோ உடன்ஜிடுச்சு nu யோஸ்சிட்டே இருந்தா வீடும் bad smell வரும் முட்டையும் கேட்டு போகும். From டோலி diaries…..

ச ப் பா ணி

உனக்கெல்லாம் என்ன கேடு என்பதன் லேட்டஸ்ட் வெர்சனே உனக்கெல்லாம் என்னப்பா” என்பதுவே

Madurai Jinna

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்”னு
ஸ்டேட்டஸ் வச்சு.,
தெருவுல திரியிற நாய்களுக்கெல்லாம்.,
பிஸ்கட் போடவேண்டியது.,

அப்புறம் ஒருநாளக்கி
அதுகிட்டயே கடிவாங்கி., ஆஸ்பத்திரிக்கி ஓடவேண்டியது.!

ச ப் பா ணி

டிவியில் சீரியல் பார்த்தால் மாமியார்

ஃபோனில் சீரியல் பார்த்தால் மருமகள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இந்தியாவில் இருந்து குவைத் வர நான்கு மணி நேரமே ஆகும்.ஆனால் ஒரு இந்திய பிரதமர் குவைத் வர 43 ஆண்டுகள் ஆகி உள்ளன ~ மோடி

# 33 வருசமா எந்த இந்திய பிரதமரும் போனதிலேன்றது ஒன்னும் ஆச்சரியமில்லை. ஆனா, கடந்த 10 வருசமா நீங்க எப்படி குவைத் டூர் அடிக்காம இருந்தீங்கன்னு தான் புரியல தெய்வமே..

நெல்லை அண்ணாச்சி


2026 ல் திமுக 200 இடங்களில் டெபாசிட் இழக்கும்
…..அண்ணாமலை

யார்றா….இப்ப சிரிச்சது..!!

Sasikumar J

ஃப்ரிட்ஜில ஐஸ் அதிகமா ஃபார்ம் ஆயிடுச்சின்னா டிப்ரீஸ் பண்ண ஆப்ஷன் இருக்க மாதிரி மனசுல ரொம்ப கவலை ஸ்டோர் ஆகிடுச்சு அப்படினா டிப்ரீஸ் பண்ண வழி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்…!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…


விஜய் கட்சியில் கோஷ்டி பூசல்? – அரியலூரில் தவெக கொடியை இறக்கிய பின்னணி!

உணவுத் திருவிழாவில் பீப் புறக்கணிப்பா? – அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share