இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
“டேய்… இனிமே நம்ம பாப்கார்னும் வாங்கி சாப்பிட முடியாதுபோலன்னு” சொன்னேன்.
“ஏன்டா… கெமிக்கல் ஏதாவது சேர்த்துட்டாங்களான்னு” கேட்டான்.
“இல்லடா… 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி போடப் போறாங்களாம்”
“தியேட்டர்ல நிம்மதியா போய் படத்த பார்த்துட்டு பாப்கார்ன் வாங்கி சாப்பிடலாம்னு பார்த்தா, அதுக்கும் இப்படி வேட்டு வச்சிட்டாங்களே. இனிமே போற பாக்க பார்த்தா நாம எதையுமே வாங்கி சாப்பிட முடியாது போலலையேன்னு” சோகமா சொன்னான்.
“எல்லா நன்மையும் நம்ம ஜிக்கே” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
உண்டியலில் தவறுதலாக விழுந்த ” ஐபோன் “
முருகனுக்கே சொந்தம்
-அதிர்ச்சியில்… பக்தர்..!!

mohanram.ko
எதை சேர்த்தால் பாப்கார்ன் இன்னும் நல்லா இருக்கும்?
F.M-ஜிஎஸ்டி

amudu
ஆட்டோகளின் பின்னே எழுதும் பழக்கம் மட்டும் நம்மிடையே இல்லாமல் போயிருந்தால், நாம் பல தத்துவஞானிகளை இழந்திருப்போம்.

Sasikumar J
வாழ்க்கையே கசப்பா இருக்கும் போது நம்மை தேடி வரும் சக்கர பாகு கூட தேன் மாதிரி தான் தெரியும்…!

ச ப் பா ணி
குளிர் காலத்தில் லாரியை, பைக்கில் ஓவர் டேக் எடுக்கும் போது..அடிக்கும் சூடான காத்து இதம்.

mohanram.ko
எந்த பொருளை எடுத்தாலும் 10 ரூபாய் என்பதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான்….
எந்த பொருளை எடுத்தாலும் ஜிஎஸ்டி….

லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரகுபதி Vs அண்ணாமலை… அமைச்சரா? பேட்டை ரவுடியா? முற்றும் மோதல்!
43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் பயணம்… 101 வயது முதியவரின் ஆசையை நிறைவேற்றிய மோடி