இன்னைக்கு நம்ம அண்ணாச்சி டீ கடைக்கு போயிருந்தேன்.
நண்பன் ஒருத்தன் ஒரு கையில டீ, இன்னொரு கையில தம் வச்சிக்கிட்டு தீவிர யோசனையில இருந்தான்.
“என்னடா… தீவிரமா என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கேன்னு” கேட்டேன்.
“இல்ல நண்பா.. நியூ இயர் வர்றதுக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு. ஒன்னாம் தேதியில இருந்து ஜிம்முக்கு போகலாம்னு இருக்கேன். ஆறு மாசம் பேமண்ட் பண்ணலாமா இல்லை ஒரு வருஷத்துக்கு பே பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.
“சரி… போன வருஷமும் இதே தான சொன்ன. மொத்தம் எத்தனை மாசம் போனன்னு” கேட்டேன்.
“கரெக்டா 20 நாள் போனேன் மச்சான்னு” சொன்னான்.
“தயவு செஞ்சு அந்த பைசாவ யாருக்குவது ஹெல்ப் பண்ணு புண்ணியமாச்சும் கிடைக்கும்னு” சொன்னேன்.
கோவத்துல கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க..
ச ப் பா ணி
குழந்தைகள் தூங்கும்போதும், மொபைல் நோண்டும்போதும் தான் அமைதியா இருக்காங்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
விராட் கோலி தன் குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயற முடிவு. # Mann Ki Baat கூட்டத்துல இருந்துல காவி சட்டைக்காரன் எஸ்கேப் ஆகறான்…

iQKUBAL
இன்னைக்கு அவ என்னைய ரிஜெக்ட் பண்ணலாம். ஆனா நாளைக்கு…… Google-ல தேடுவாளா? அதான் இல்ல.. நாளைக்கும் ரிஜெக்ட் தான் பண்ணுவா.

ச ப் பா ணி
நல்ல ஆலோசனையை அதிகாரிகள் மெச்சும்போது.. ‘கழுதை மேய்க்கிற பையனுக்கு இப்பிடி ஒரு அறிவான்னு’ அடுத்தவங்க மனசாட்சியின் அசரீரியும் கேட்கிறது
Sasikumar J
குளிர்காலத்துல பச்சை தண்ணீரில் வேக வேகமாக குளிக்கிறதும், சுடு தண்ணீரில் ஆர அமர பொறுமையா குளிப்பதும் நமக்கு நாமே வைக்கும் காலை பரீட்சையே…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எப்ப எதாவது இடத்துல பேச ஆள் இல்லாம மணிக்கணக்குல காத்துகிடக்க வேண்டியிருக்கோ, அப்ப பார்த்து மொபைல்ல 10% பேட்டரி மட்டுமே பாக்கி இருக்கனும்னு டிசைன்ல இருக்கு..

நெல்லை அண்ணாச்சி
அதானி….
அம்பேத்கர்…
ராகுல் மீது வழக்கு….
கூட்டத்தொடர்…ஓவர்…!!!

iQKUBAL
When elites become farmers :~
வீட்டு வேலையே செய்ய தெரியாத உனக்கு,
விவசாய வேலை எதற்கு?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் – ஸ்டாலின் நம்பிக்கை!
Comments are closed.