இது என்னடா கடவுளுக்கு வந்த சோதனை? அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்…

மாஸ்டர் கிட்ட ஒரு பிளாக் டீ, ஒரு லைட் டீ ஆர்டர் பண்ணிட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.

நண்பர், “சத்ரபதி சிவாஜி சிலை உடைஞ்சி விழுந்தது தான் நாடு முழுக்க பெரிய ஹாட் டாபிக்கா மாறியிருக்கு பார்த்தீங்களான்னு” கேட்டாரு…

“ஆமா நண்பா… சத்ரபதி சிவாஜி தான் நம்ம தெய்வம்னு இன்னைக்கு மோடி ஜி பேசியிருக்காரு. அதுமட்டுமில்ல, அந்த தெய்வத்தின் முன்பு நான் பணிந்து மன்னிப்பு கேட்டுக்குறேன்னும்” சொல்லிருக்காரு…

நண்பர், “அவரே ஒரு தெய்வம். தெய்வமே தெய்வத்துக்கிட்ட மன்னிப்பு கேட்குதான்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியை முந்தினார் அதானி: ரூ.11.60 லட்சம் கோடி சொத்துகளுடன் முதலிடம் #மாசக்கடைசி மக்கள் மனநிலை
Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க? காங்கிரஸ் ஆட்சியை விரட்ட அறிஞர் அண்ணா, திமுக ஆட்சியை விரட்ட எம்ஜிஆர், அதிமுக ஆட்சியை விரட்ட ஸ்டாலின் இவங்கெல்லாம் லண்டன் போய் அரசியல் படிச்சிட்டா ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாங்கன்னு கேட்கிறாம்பா!
ச ப் பா ணி
நீ பார்க்காத பார்வைக்கொரு நன்றி… #ட்ராபிக் போலீஸ்
படிக்காதவன்™
ஹவுஸ்ஒயிப் தியாகிங்க சார் யார்ரா சொன்னா அவங்களே சொல்லிக்கிட்டாங்க…
ச ப் பா ணி
“இப்ப பணம் கொடு..அப்புறம் வாங்கிக்கலாம்னு” சொல்லும் நண்பர்களுக்குள்..
அஞ்சாறு வடக்குப் பட்டி ராமசாமிகள் ஒளிந்துள்ளார்கள்
vijaychakkaravarthy
அப்பனே விநாயகா….
உன்கிட்ட தூக்கத்த Point to point bus மாதிரி நிற்காம கேட்கல …
Atleast டவுண் பஸ் மாதிரி நிறுத்தி நிறுத்தியாச்சும் கொடுத்திரு…. ஆனா கொடுக்காம மட்டும் விட்டுடாத
படிக்காதவன்™
நான் அடிச்சா நீ தாங்குவ ஆனால் தூங்க மாட்ட இப்படிக்கு அலாரம்…
கோழியின் கிறுக்கல்!!
College friends WhatsApp groupல Tourக்கு plan பண்ணா, எங்க வீட்ல Tensionஏ ஆக மாட்டாங்க,
ஏன்னா எப்படியும் Plan மட்டும் தான் போடுவோம்னு அவங்களுக்கு தெரியும்!!
கடைநிலை ஊழியன்
காலைல எழுந்ததும் phone ‘ன கைல எடுக்குறவங்க.. எப்படி கிளம்புனாலும், லேட்டா தான் கிளம்புவாங்க னு ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுது..
கோவிந்தராஜ்
ஓரு டவுட் காதலிக்கிற பொண்ண “காதலி” னு சொல்றோம்…
கல்யாணம் பண்ற பொண்ண “கல்யாணி” னு தான சொல்லனும்
Why “பொண்டாட்டி”….???
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share