அந்த ஊருக்கு ஏன் போகல? – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

நண்பர், “மோடிக்கு என்னா தைரியம் பார்த்தீங்களா? போர் நடக்குற உக்ரைனுக்கே போயிட்டு வந்துருக்காருன்னு” சொன்னாரு.

அதுக்கு நான், “அதெல்லாம் சரி தான்.. இந்தியாவுல மணிப்பூர்னு ஒரு மாநிலம் இருக்கு. அங்க ஏன் மோடி போகமாட்டுக்காருன்னு” கேட்டேன்..

“சிக்னல் சரியா கிடைக்கல… கொஞ்ச நேரம் கழிச்சி பேசுறேன்னு சொன்னவரு, அதுக்கப்பறம் கால் பண்ணவே இல்லை”

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
Suggestion என்பது ‘நீ வேற இருக்க..எதுக்கும் நீயும் ஒன்னு சொல்லிடு’ எனும் அர்த்தத்தில் கேட்பது
படிக்காதவன்™
யாருமற்ற இடத்தில் தனிமையில் இருக்கும்போது வேர்க்கடலை கொடுக்கும் ஆறுதல் யாருகிட்டயும் கிடைக்காது…
கோழியின் கிறுக்கல்!!
படிக்கிற கல்லூரியும், கட்டின கல்யாணமும் எவ்வளவு நல்லா இருந்தாலும், ‘நல்லா இல்லை’னு தான் சொல்வாங்க!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
போனில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கறவங்க சந்தோசமா தான் இருப்பாங்கன்னு ஒரு ஐதீகம்.
Mannar & company™
கேமராவுக்கு பின்னாடி செய்யும் உதவி “ரியல்” ஆகவும்,
கேமராவுக்கு முன்னாடி செய்யும் உதவி “ரீல்ஸ்” ஆகவும் வருகிறது!!

ச ப் பா ணி

உரையாடல்கள் வாயிலிருந்து வாட்ஸ் அப்பிற்கு இடம் பெயர்ந்து விட்டது

சரவணன். 𝓜
ஓவ்வொருவரிடமும் ஒரு கதையை சொன்னாலும் சொல்லப்படாத ஒரு உண்மையான சீமான் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்!
Mannar & company™
ஒரு ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கணும்னா செ’மத்தியான’ சாப்பாடு, செ’மத்தியான’ தூக்கம்னு சொல்ற மாதிரி இருக்கணும்!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சில விஷயங்களை தூரத்துல இருந்து ரசிக்கற வரைக்கும் தான் அழகு. அதுவே நமக்கு சொந்தமாயிட்டா அது மேல இருந்த ஈர்ப்பு போயிருது. இந்த ஞாயித்துகிழமையும் அப்படித்தான்.. நேத்து வரை ஞாயித்துகிழமை மேல இருந்த ஆர்வமும் சந்தோசமும் போயி நாளைக்கு வேலைக்கு போகனுமேன்ற கவலை தான் இப்ப மிச்சம் இருக்கு.
லாக் ஆஃப்
+1
6
+1
20
+1
0
+1
10
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *