இந்தியன் 2 தோல்வி குறித்து ஆய்வு… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு போன நம்ம நண்பர் ஒருத்தர் கிட்ட “மீட்டிங்ல இன்னைக்கு எதை பத்தி பேசுனாங்க”ன்னு கேட்டேன்.

“பாஜக கூட்டத்துல தேர்தல் தோல்வி பத்தி ஆய்வு பண்றாங்க… அதிமுக கூட்டத்துல அவங்களோட தேர்தல் தோல்வி குறித்தும் கட்சியோட கட்டமைப்பு பத்தியும் ஆலோசனை நடத்துறாங்க… இங்க என்ன பண்றாங்க… இந்தியன் 2 படத்தோட தோல்வி பத்தி ஆய்வு நடத்துறாங்க”ன்னு சொல்லி மையமா சிரிச்சாரு.

இதுக்கு மேல அவரை கிளற வேணாம்னு நான் வந்துட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

அம்மாக்களின் ராஜதந்திரங்களில், மகளுக்கு ஒரு ஃபார்முலாவும் மருமகளுக்கு ஒரு ஃபார்முலாவையும் பின்பற்றுகிறார்கள்.

 

கோழியின் கிறுக்கல்!!
‘கோபமா?’ என்ற கேள்விக்கு, ‘இல்லையே’ என்று பதில் வந்தால் மிதமான கோபம் எனவும்,

‘எனக்கு என்ன கோபம்?’னு சொன்னா கடுங்கோபம் எனவும்,

‘நான் யாரு உங்க மேல கோபப்பட?’ என்றால் கொலைவெறி எனவும் பொருள்படும்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏன்டா கோவமா இருக்க..?

ட்விட்டர் முழுக்க இன்ஸ்டா வீடியோவா இருக்கு..

சரி எங்க போற..?

இன்ஸ்டால போயி ரீல்ஸ் பார்க்க போறேன்..

சரவணன். ????

ஒரு புத்தகத்தின் அட்டை மட்டும்  பார்த்து விமர்சனம் செய்ய முடியாது – விஜய் கொடி அறிமுகம் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்

கரெக்ட்தான்..படத்தை நெட்பிளிக்ஸ்ல முழுசா பார்க்காம எப்படி கருத்து சொல்ல முடியும்?

செங்காந்தள்

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகும் -டிடிவி தினகரன்

அப்புறம் ?

2026 இல் 2031 சட்டசபைத் தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

வாழ்க்கைல ஏற்கனவே இருக்குற துன்பம் போதாதுனு இந்த மேகா ஆகாஷ் புள்ளயும் திடிர்னு Engage ஆகி இன்னும் Depression குடுக்குது பாட்டி..

கோவிந்தராஜ்
“ரொம்ப வயிறு வலிக்குது டாக்டா்…
“யூரின் எல்லாம் ஒழுங்கா போகுதா …
“போகுது டாக்டா்
யூரின் போகும் போது எரியுமா
தெரியல டாக்டா்
இன்னிக்கு போகும் போது பத்தவச்சி பாக்குறன்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel