‘கோ பேக்’, ‘கம் பேக்’… – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

“பிரதமர் மோடியை கோ பேக் என இனி யாரும் சொல்ல முடியாது. கோ பேக் என்று சொன்னவர்கள் அவருக்கு கம் பேக் சொல்ல வேண்டிய சூழல் வரும்னு” தமிழிசை சவுந்தரராஜன் இன்னைக்கு பேசியிருக்காங்க.

இப்பதான் கடந்த இரண்டு நாளா நம்ம பசங்க இந்தியன் 2 படத்துல வந்த கம் பேக் இண்டியன், கோ பேக் இண்டியன் மீம்ஸ் போடாம இருந்தானுங்க. மறுபடியும் அவனுங்கள நீங்களே உசுப்பேத்தி மீம் போட வச்சிருவீங்க போலையே.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

ஒரு புடவையை எந்தெந்த இடத்திற்கு கட்டிச்சென்றோம் எனும் Complete data பெண்களின் மூளையில் அழிக்க முடியாத வகையில் பதிவாகி இருக்கும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏய் இங்க பாருடி.. உச்சக்கட்ட போர் நடக்கும் போதே போரை நிறுத்தனும்னு தைரியமா யுக்ரேனுக்கு கிளம்பிட்டாரு..

அடி போங்கடி.. நானே அம்பானி வீட்டு குழுந்தை காதுகுத்துக்கு யுக்ரேன் அதிபருக்கு பத்திரிக்கை வைச்சுட்டு வர சொல்லிட்டானேன்னு பயத்துல போயிட்டு இருக்கேன்..

ச ப் பா ணி

தன்னை நம்பாதவன் மட்டுமே கடிகாரத்தை பத்து நிமிடம் வேகமாக வைத்திருப்பான்

செங்காந்தள்

அன்பே! நீ செய்த உப்புமாவில் கோழித் தீவனத்தின் சாயல்…!!!

ச ப் பா ணி

நம் கையெழுத்து ஆட்டோகிராஃபாக மாறும் இடம் பேங்க் லோன் படிவங்களில் தான்

நெல்லை அண்ணாச்சி
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போறாராம் # மணிப்பூர்… உக்ரைன் & மோடி…!!!

ச ப் பா ணி

ரூம் மேட்: என்ன புரோட்டாவுக்கு நம்மையும் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட பழக்கிட்டானுக

கோயம்புத்தூர் காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான்

செங்காந்தள்

முதலில் பசித்த பின் சாப்பிடச் சொன்னார்கள். இப்போது டைமுக்கு சாப்பிடச் சொல்கிறார்கள்…!!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சன் மனைவியிடம் விசாரணை – பின்னணி என்ன?

சென்னை மண்டல பொதுப்பணித்துறை பணிகள்… அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தல்!

+1
3
+1
11
+1
0
+1
5
+1
1
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *