இது என்னடா புது உருட்டா இருக்கு: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு காலையில 10 மணி வாக்குல நண்பன் ஒருத்தனுக்கு கால் பண்னேன்.

“என்னடா… சாப்டியான்னு” கேட்டேன்.

“இல்லைடா. இப்பதான் டீயும் வேர்க்கடலையும் கடையில போய் சாப்டு வந்தேன். ரூம்லையே ஏதாவது சாப்பாடு செய்யலாமான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.

“ஏன்டா ஹோட்டல்ல போய் சாப்டலாமேன்னு” கேட்டதுக்கு

“ஹோட்டல்ல விலை அதிகமா இருக்குன்னு” சொன்னான்.

“சரி… டீ, வேர்க்கடலை எவ்வளவுன்னு” கேட்டேன்.

“மொத்தமா 55 ரூபா ஆச்சுன்னு” சொன்னான்.

“டேய் இதுக்கு நீ 5 இட்லி ஹோட்டல்ல வாங்கி சாப்டிருக்கலாமேன்னு” சொன்னேன்.

“டீ குடிச்சாதான் அந்த நாளே புத்துணர்ச்சியா ஸ்டார்ட் ஆகுதுன்னு” சொல்றான்.

இவனையெல்லாம் என்ன பண்ண?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

மனைவி தூங்கும்போது மிக அழகு.. வாய் மூடியிருப்பதால்

சரண்யா

Forgot password என்பது இறந்தவனை உயிற்பிப்பது போல,…
கடைநிலை ஊழியன்
ஹோட்டல்ல, ஒரு 10 நிமிஷம் மெனு கார்ட சுத்தி சுத்தி பாத்து, ஆர்டர் பண்ணிட்டு, வர வரைக்கும் வெயிட் பண்ணும் போது, பக்கத்துக்கு டேபிளுக்கு கொண்டு வர ஆர்டர பாத்ததும், பேசாம நம்மளும் இதையே ஆர்டர் பண்ணிருக்கலாமோ னு தோணும் பாருங்க.. அதுக்கு தான் மனித மனம் ஒரு குரங்கு னு சொல்லுறாங்க !!
ச ப் பா ணி
சமையல் செய்யும் வீடியோக்கள் அதிகம் பார்ப்பதும், சமையல் செய்யவே பிடிக்காதுனு சொல்றதும் ஒரே பெண்ணா
செங்காந்தள்
மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் உள்ள சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு பூண்டின் விலையைக் குறைப்பதோடு, மக்கள் தொகையையும் குறைக்க வேண்டும் என்று உறுதி ‘பூண்டு’ உள்ளார்கள்.
கடைநிலை ஊழியன்
வார வாரம் ஞாயிற்றுக்கிழமை ‘யை கடந்து செல்வது, மிக பெரிய மன போராட்டமே !!
செங்காந்தள்
ஆட்களைப் பிடிக்கும் பழக்கம் தமாகாவில் இல்லை- ஜி.கே.வாசன்.
கூட்டணியில் ஓரிரு தொகுதிகள் கேட்கும் போதே தெரியும்.
லாக் ஆஃப்
+1
4
+1
16
+1
0
+1
9
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *