இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பன் ஒருத்தன் இன்னைக்கு ரிலீஸான ‘கோட்’ படத்தோட டிரெய்லரை ஸ்டேட்டஸ்ல வச்சி, “இனிமே காந்திய பாதை தான்னு” ரைட்டப் பண்ணியிருந்தான்.

“என்னடா காந்திய பாதைன்னு” ஸ்டேட்டஸ் வச்சிருக்கன்னு அவனுக்கு மெசேஜ் பண்ணேன்.

“இல்லை தலைவர் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துட்டாருல்ல, அதான் கோட் படத்துல அவருக்கு காந்தின்னு பேரு வச்சிருக்காங்க. அதனால இனிமே எங்களோட பாதை காந்திய பாதைன்னு” சொன்னான்.

“அப்போம் கடைசியா நடிக்குற படத்துல அவருக்கு நேதாஜின்னு பெயர் வைப்பாங்களான்னு” கேட்டேன்.

ரீப்ளை வரவே இல்லை…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

செருப்பு அணியாததை குத்திக் காட்டி சொல்கின்றன கற்கள்

கோழியின் கிறுக்கல்!!

வீட்ல போடுற டீயை பிடிக்காம தான்,

இங்க பாதி பேர் வாக்கிங்கே போறான்!!

 

கடைநிலை ஊழியன்

opening instagram – காத்து மேல..

காத்து கீழ.. அப்பா டேய்.. எப்படா இத விடுவீங்க.. முடியல டா..

செங்காந்தள்

பாஜக ஆளும் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு பாலியல் கொடுமை செய்து தலைத்துண்டிக்கப்பட்ட விவகாரம் முடிந்து போன ஒன்று. இப்போது கொல்கத்தா விவகாரத்தை மட்டும் பேசுவோம். -பாஜக நடிகை குஷ்பு ஆவேஷம்

ஆ! வேஷம் என்பதே சரி.

சரவணன். 𝓜

காலம் எவ்ளோ வேகமா சுத்துது பார்த்திங்களா..? எந்த பெட்ரோல் பங்க்ல செல்போன் பயன்படுத்தாதீர்கள் ன்னு அறிவிப்பு வச்சாங்களோ அதே பெட்ரோல் பங்க்ல செல்போன் (ஜிபே) மூலமா பணம் அனுப்ப அறிவிப்பு வச்சிருக்காங்க..

பரமசிவம் ராமசாமி

பெண்களைப் பொறுத்த வரை டைம் மேனேஜ்மென்ட் என்பது… பிறந்த வீட்டிற்கு போகும் போது மட்டுமே சரியாக கடைபிடிக்கும் ஒன்று..!!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
Exam paper ல கொடுக்குற கணக்கும் வாழ்க்கையும் ஒண்ணு தான். ரொம்ப ஈசியா இருந்தா தப்பா பண்றோம்னு புரிஞ்சிக்கனும்.
கடைநிலை ஊழியன்
தளபதி யூத்தா தெரியணும் னு பிளான் பண்ணி, பிரபு தேவா ‘வுக்கும், பிரஷாந்த் ‘க்கும் கொஞ்சம் வயசு தெரியுற மாதிரி மேக்கப் போட்டுருக்கானுங்க..
Sivakumar
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க கடினமாக உழைக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
2026 லயும் ‘திராவிட மாடல்’ ஆட்சி வர பாடுபடப்போறீங்கன்னு சொல்லுங்க…!
லாக் ஆஃப்
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0