அது கதை இல்லயாம் நெசமாம் : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு சாயங்காலம் டீக்கடைக்கு போகும் போது, தீவிர தவெக வெறியர் ஒருத்தரு… “நேத்து கூட்டத்துல பேசுனப்போ… எவ்வளவு தடைகள் வந்தாலும் நம்ம தலைவர் அத்தனையும் தவிடு பொடியாக்கி 2026ல  முதல்வர் ஆக போறாரு”னு அந்த கட்சியோட பொ.செ சொன்னாதா சொல்லிட்டு இருந்தாரு…

இத கேட்ட தீவிர தளபதி பட வெறியர், “கதை நல்லாருக்கு… இதா தளபதி 69 கதையா? ஹீரோயின் யாரு ? வில்லன் யாரு?னு தெரியுமா ப்ரோ”னு கேட்டாரு பாருங்க..

தவெக வெறியர் ஒரு நிமிஷம் தவிடு பொடியா ஆயிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. 


▶படிக்காதவன்™✍

நண்பர்களோடு இருக்கும்போது
சிகரெட் பிடிக்காதீங்க

ஏன்.. நண்பர்கள் நலன் கருதியா

இல்ல.. சிகரெட்ல பாதிய பங்கு போட்டுக்குவானுங்க…

Sasikumar J

நல்லா படிச்சு வேலைக்கு போய் ஹார்டு ஒர்க்கர் அப்படின்னு பேரு வாங்குறதுக்கு ஆவரேஜா படித்து மேனேஜர் அப்படின்னு பெயர் வாங்கலாம்…!

புதினா

சிலருக்கு தூக்கத்தில் நடக்குற வியாதி
சிலருக்கு தூக்கத்தில் பேசுற வியாதி
சிலருக்கு தூங்குறவங்களை எழுப்பிவிட்டு பாக்குற வியாதி…

Mannar & company™🕗

மனிதர்களுக்கு மட்டுமல்ல,
உடற்பயிற்சி நிலையங்களுக்கும்
‘வயிறே’ பிரதானம்!

சரவணன்

காலையில் நடைபயிற்சி அப்பறம்
டீ கடையில் வடை தின்ன முயற்சி,

இது வாக்’கிங் இல்ல ஜோக்’கிங்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மலையானை தரிசனம் செய்ய விரும்பும் வேற்று மதத்தினர், தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கையொப்பம் இட்ட படிவம் அளிக்க வேண்டும் – தேவஸ்தானம்

# வேண்டுதல் நிறைவேறலேன்னா தரிசன டிக்கெட் காசு ரீபண்ட் தருவோம்னு தேவஸ்தானம் கையெழுத்து போட்டு தருமான்னு பக்கத்து டேபிள்ல கேட்க சொன்னாங்க..

அண்ட்

வந்தே பாரத் ரயிலில் பஜனை பாடிக்கொண்டே திருப்பதி சென்ற பாஜகவின் மாதவி லதா!

பவன் கல்யாண் பி லைக்: டேய் யார் இது… என்னயவே சசேஸ் பண்ணி போய்கிட்டு இருக்கு!

✒️Writer SJB✒️

கிடைச்சதை வச்சு சந்தோஷமா வாழ்ந்தா 80ஸ் கிட்

நினைச்சதை எல்லாம் வாங்கி சந்தோஷமா வாழ்ந்தா 2கே கிட்

நெனச்சதையும் வாங்க முடியாம கிடைக்குமா கிடைக்காதா என்று கூட தெரியாம வாழ்றவன் 90ஸ் கிட்..!

ஜாஃபர்

கடவுள்:- உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ஆனால் உனக்காக எதுவும் கேட்கக்கூடாது,,!

அப்போ சரி கடவுளே
நான் கண்ணாடி முன் நிக்கும் போது அதில் ஒருத்தன் தெரிவான் அவன் கேட்டதெல்லாம் கொடு போதும்..!!

அப்படியே ஆகட்டும்..!!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

மெய்யழகன் : விமர்சனம்!

சென்னை திரும்பிய ஸ்டாலின்… காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற செந்தில் பாலாஜி

 

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *