இன்னைக்கு டீக்கடைக்கு போனா அங்க சூர்யா பேன்ஸும், ரஜினி பேன்ஸும் பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க…
அப்போ, ”நான் பிறக்கும் போதே அவர் நடிக்க தொடங்கிட்டாரு. அவர் படம் வர்றது தான் சரியா இருக்கும்’னு எவ்ளோ அழகா சூர்யா சொல்லிருக்காருங்க பாருங்க”னு ஒருத்தன் சொன்னான்.
அதே கேட்ட ரஜினி பேனு, “இத பத்தி ரஜினிட்ட கேட்டப்போ, ’சூர்யா படமும் நல்லா ஓடனும்’னு வாழ்த்திருக்காரு. அவர் பெருந்தன்மைய பாராட்டனும்”னு சொன்னான்.
இதுக்கிடைல ஒருத்தன் வந்து சூர்யா நாசூக்கா ரஜினிய வயசானவர்னு கிண்டல் அடிச்சிருக்காருனு கொளுத்தி போட…
வழக்கம்போல பைட் ஸ்டார்ட் ஆயிடுச்சி… நா பைக் எடுத்துட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
மயக்குநன்
ஓட்டுக்கு பணம் வாங்குவதால் பொதுமக்களால் லஞ்ச லாவண்யத்தை தட்டிக் கேட்க முடியவில்லை!- டிடிவி தினகரன்.
தேர்தல்ல டோக்கன் கொடுத்ததால்தான்… உங்களாலும் ஊழலை ஸ்ட்ராங்கா எதிர்க்க முடியலை போல..?!
🌾சாரல்🌾
சென்னைக்கு எதுக்கு கார் ரேஸ் என்று கேட்கிறார்கள்..
இந்தியாவுக்கு எதுக்கு ஒலிம்பிக் மூலம் வரும் பதக்கங்கள்..? என்று கேட்பார்களா..? அது இந்தியாவுக்கு கவுரவம் என்றால் கார் ரேசும் சென்னைக்கு கவுரவம் தானே.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பணம் இல்லையென்றால் ஒரு ம*ரும் புடுங்க முடியாது என உணர்த்தும் நாள்
ஞாயிற்றுகிழமை.
Kirachand
அதிமுக ஆட்சிக்கு வரும்போது அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 கொடுக்கப்படும்! – ராஜன் செல்லப்பா
அவசரப்பட்டுட்டீங்ககளேண்ணே! திமுக ரூ.3000 கொடுக்கணும்னு போராட்டம் பண்ணுவாங்களே…
ரூ. 2000ம்னு குறைச்சி சொல்லி இருக்கணும் நீங்க!
#சலூன்
✒️Writer SJB✒️
படத்தில் ஒரு தீவிரவாதிக்கு முஸ்லிம் பெயர் வைத்தால் ஓகே,
இந்து பெயர் வைக்கக் கூடாதாம்,,
இதை சொல்வது யார் என்றால் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற ஒரு இந்து தீவிரவாதியின் ஆதரவாளர்கள்..!
VBS
டிப்ரஷனா இருந்தா வைஃபை கூட்டிட்டு சினிமாவுக்கு போயிட்டு வாங்க,,,
டேய் டிப்ரசனே அவளால தான்டா,,,,!
சுப்பிரமணி
பைவ் ஸ்டார் ஹோட்டல் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?
காசு இருந்தா எந்த சுப்பன் கூட போகலாம்..!
mohanram.ko