தீபாவளி அடினா இதானோ : அப்டேட் குமாரு!

டிரெண்டிங்

தீபாவளி சிறப்பாக கொண்டாடிலாம்னு இன்னைக்கு காலைல சீக்கிரமா எந்திரிச்சி, தெருவுக்கு பட்டாசோட வந்தேன்.

அங்க என் நண்பன் சோகமா இருந்தான், என்னனு கேட்டதுக்கு, “தீபாவளினதும் எல்லோருக்கும் பட்டாசு, புது டிரெசு,  பலகாரம்ன் தானே ஞாபகம் வரும்…

ஆனா எனக்கு மட்டும் வெடி சத்தம் கேட்டு நடுங்குற பாட்டி, அழுற கொழந்த, பயந்து ஓடுற நாய்னு ஞாபகம் வருதுனு சோகமா சொன்னான்.

தீபாவளி சந்தோசத்துல இருந்த நான், அவன் சொன்னத கேக்காம, அவன் பின்னாடியே வெடி வச்சிட்டு ஓடுனேன்.

அப்போ வெடி சத்தம் கேட்டு பயந்து ஓடுன நாய் குறுக்க ஓட, அது மேல மோதி, பொத்துன்னு கீழே விழுந்து கெடந்தேன்.

ஒருவேள இதுதான் கர்மாவோ….?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

சரவணன்

மெது வடைக்கு ஆயுள் குறைவு ஆனா ஆயில் அதிகம் முறுக்குக்கு ஆயுள் அதிகம் ஆனா ஆயில் குறைவு…

பலகாரம் சொன்ன பாடம்….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

~ ஒரு வருசமா எங்க இருந்தான்னே தெரியாத பல பேர் திடீர்னு வாட்சப்ல வாழ்த்து சொல்லிருப்பானுகளே..?

ஆமா

~ ஆக்சிடென்ட்ல சாக கிடந்த போது கூட விசாரிக்காதவனெல்லாம் பட்டாசை பாத்து வெடிங்க புரோன்னு மெசேஜ் பார்வேர்டு பண்ணிருப்பானே..

ஆமா

~ இதெல்லாம் நீ ஏன் கேட்கற..?

என் கிட்டயும் சொன்னானுவளே..!

Sasikumar J

சினிமால தான் மாஸ் ஹீரோ, ஹீரோயின் படம் ஆரம்பத்திலேயே என்ட்ரி இருக்கும்

அதுவே பட்டிமன்றத்தில் கடைசில தான் என்ட்ரி கொடுப்பாங்க..!

பாலா

அளவுக்கு மிஞ்சினால் அதிரசமும் நஞ்சு…

▶படிக்காதவன்™✍

கிருஷ்ணர் மட்டும் நரகாசுரனை வதம் செய்றதுக்கு முன்னாடி

ஒருநாள் பெண்களுடன் ஷாப்பிங் போயிருந்தா

நரகாசுரனும் பிழைத்திருப்பார் பல ஆண்களும் தப்பித்திருப்பார்கள்…

கிரீஸ் டப்பா

~ எனக்கு மட்டும் தீபாவளி போனஸ் கிடைக்கல புரோ..

அடடா.. எங்க புரோ வேலை செய்யறீங்க..?

~ எங்க அப்பவோட மளிகை கடையில..

சசி

பண்டிகை காலத்தில் கமர்சியலா படம் எடுக்கணும் கமல் படம் மாதிரி எடுக்கக்கூடாது…!

எந்த படமா இருக்கும்?

வேலு

நரகாசுரன் ~

கந்து வட்டிக்கு கடன வாங்கி என் தெவசத்த செலிப்ரேட் பண்ணிட்டு இருக்கீங்க.

யார்ரா நீங்கள்லாம்…?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

IPL Retentions : ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்கள் யார் யார்? – முழு விவரம்!

லக்கி பாஸ்கர் : விமர்சனம்!

+1
2
+1
29
+1
0
+1
7
+1
1
+1
4
+1
3