தல தீபாவளி எப்ப வரும்? : அப்டேட் குமாரு
இவ்ளோ நாள் சிங்கிளா இருக்கேனு ரொம்ப பெருமையா நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு எங்க அப்பா ஒரே வார்த்தை அசிங்கப்படுத்திட்டாருனு நண்பன் கிட்ட சொன்னேன்.
அப்படி என்ன சொன்னாருனு கேட்டான்.
’உன் கூட படிச்சவன்லாம், அட்லீஸ்ட் ட்விட்டர்ல புளூ டிக் வாங்கி, அது மூலமா நாலு காசு பாத்து தல தீபாவளி கொண்டாடிட்டு இருக்கான். நீ என்னடானா ‘கடவுளே அஜித்தே’னு கூவிக்கிட்டு தறுதலையா சுத்திட்டு இருக்கனு சொல்லிட்டாருனு சொன்னேன்.
அதுக்கு அவன், நல்ல வேள நான் தளபதி பேனுன்னு சொல்லிட்டு சிரிக்கிறான் தட் சிங்கிள் ப்ரெண்ட்.
நீங்க அப்டேட் பாருங்க…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
விஜய் தொடங்கியுள்ள கட்சியால் எங்களது வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கொள்கையால் கட்டப்பட்ட கோட்டை மதிலை சிறுவர்கள் சிதைத்துவிடமுடியுமா? – ஜி கே வாசன் கேள்வி
#அப்படி எந்த சிமெண்ட்ல கட்டிருப்பாய்ங்க?
Sasikumar J
வேலை, விலை இரண்டுமே கம்மி
இப்ப மட்டும் ஊனு சொல்லு
ஒரு குலோப்ஜாமூன் பாக்கெட்டுக்கு ஒன்னு ஃப்ரீ வாங்கிட்டு வந்துடறேன்…!
mohanram.ko
2024-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கிக்கான விருதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக்கு குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வழங்கியுள்ளது!
லன்ச் டைம் 1 மணிக்கு விருது கொடுக்கிற ஃபங்ஷன் வைங்க, தமாஷா இருக்கும்
Sasikumar J
உண்மையான போனஸ் எது தெரியுமா சார்…!
பணம் கொடுத்து ரொம்ப நாள் ஆகியும் வரவே வராது அப்படின்னு இருக்கிறப்ப திரும்ப கைக்கு வர பணம் தான் போனஸ்…!
செங்காந்தள்
நல்ல நண்பர்களின் மொபைல் நம்பர்களும் 100, 108 ஜப் போல அவசரகால நம்பர்கள் தான்…!!!
ச ப் பா ணி
தீபாவளிக்கு டூர் போகலாம்?
எல்லாப் பக்கமும் கூட்டமா இருக்குமே
சரி படத்துக்கு போகலாம்?
டிக்கெட் விலை கூட இருக்குமே
வீட்டிலிருந்தே பட்டாசு வெடிக்கலாம்?
படிச்ச நாமலே வெடி வெடிக்கலாமா
சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகலாம்?
சோத்துக்கு வந்ததா நினைப்பாங்களே
வேற என்னதான் பன்றது??
தூங்கிருவோம்…
அதான் சரி!
இந்திரஜித்
’டெய்லர்களில் இரண்டு ஜாதிகள் தான்
துணியை கிழித்து தைப்பவர்கள், கிழிந்த துணியை தைப்பவர்கள்’
~ தீபாவளி கண்டிபிடிப்பு
✒️Writer SJB✒️
ஒரு டவுட்டு.
தேவர் குருபூஜை
இமானுவேல் குருபூஜை
நடக்கும் போதெல்லாம்
தென் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு
லீவு விட்ருவாங்களோ?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதுக்குள்ளயா?… மோசமான நிலையில் சென்னை காற்றின் தரம்!
உலக அழகிக்கு போட்டி… அபிஷேக் பச்சனை வளைத்த நடிகை என்ன சொல்கிறார்?