செங்கல்பட்டு மட்டும் தக்காளி தொக்கா?: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இந்த கனமழையால சென்னை, காஞ்சி, திருவள்ளூரு, ராணிப்பேட்டை மாவட்டத்துல இருக்குற ஸ்கூலுக்கு எல்லாம் விடுமுறை அறிவிச்சாட்டங்க.

ஆனா நடுவுல இருக்குற செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மட்டும் விடுமுறை அறிவிச்சிட்டு அப்புறமா வாபஸ் வாங்கிட்டாங்க.

இத பாத்துட்டு இருந்த நம்ம வீட்டு லிட்டில் பிரின்சஸ், ’அப்பா நமக்கு மேல, கீழ, சைடு இருக்குற எல்லா மாவட்டத்துக்கும் லீவு விடுறாங்க… ஆனா நமக்கு மட்டும் இல்ல… நடுவுல இருக்குற செங்கல்பட்டுல மட்டும் மழ கீழ இருந்து மேல பெய்யுதுன்னு ஒருவேள நினைக்குறாங்களோ?’ன்னு கேட்குது…

அதானே… ’காலை டீ குடிக்குறதுக்குல்ல லீவு சொல்லிருவாங்கம்மா… இப்போ போய் தூங்கு’னு சமாளிச்சு தப்பிச்சுருக்கேன்…

வர்ணபகவான் ஜி கருண காட்டுவாரா…?

நீங்க அப்டேட் பாருங்க!

கடைநிலை ஊழியன்

இந்த உலகத்துல உங்களுக்கு னு..

ஒருத்தர் இருப்பாங்க.. அதான..

அதான் இல்ல.. யாரும் இருக்க மாட்டாங்க.. நீங்க தான் உங்கள பாத்துக்கணும்..

கோழியின் கிறுக்கல்!!

மனைவியுடன் வண்டியில் செல்லும் போது, போலீஸ் நிறுத்தினால், நாம் தப்பு பண்ண மாதிரி போலீஸ் பாக்குறாங்குறாங்ளோ இல்லையோ, கண்டிப்பாக மனைவி கேவலமா ஒரு லுக் விடுவாங்க!!

✒️Writer SJB✒️

கடவுள்:- நான் நல்லவங்களை சோதிப்பேன்..

நான்:- அதனால் தான் கேட்கிறேன் அப்படி என்ன நான் நல்லது பண்ணிட்டேன்னு நீ என்னை இப்படி சோதிக்கிற..?

Kirachand

மழை பெய்யும் பொழுது

டீ கடையில் ஒதுங்குவது கூட புத்திசாலித்தனமே!

Dr. M. A. N. Loganathan

அடுத்த முறை சுரங்க விபத்து ஏற்பட்டால் எங்கள் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ன்னு மெசேஜ் அனுப்பியிருக்கானுங்க சார்..

யாரு??

முந்தா நாள் மூணு கிலோமீட்டர் சுரங்கம் தோண்டி ஜெயில்லேர்ந்து தப்பிச்சவனுங்க..

Kirachand

ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?

உத்ரகாண்ட் சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் போட்டோ ஷூட் எடுத்து பிரதமர் மோடி எப்ப வெளியிடுவார்ன்னு கேட்கிறாம்பா…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

எச்சரிக்கை: சென்னையில் 5 முக்கிய சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர்!

ஜிவி பிரகாஷின் “ரெபெல்” ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

 

+1
3
+1
11
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *