சை டிஷ்ஷா… மெயின் டிஷ்ஷா? : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நேத்து தீபாவளி அன்னைக்கு பொண்டாட்டி ஆசையா சுட்டு முறுக்கு கொடுத்தா… சந்தோசமா சாப்பிட்டேன்.

இன்னைக்கு பாத்தா காலைல மதியம் சாய்ந்தரம் நைட்டுன்னு சாப்ட உக்காந்தாலே சைடிஸ்ஸா முறுக்கையும் வைச்சா..

லைட்டா எரிச்சலாகி, ’என்னம்மா… ஒரே முறுக்கா இருக்கே… கூட்டுலாம் வைக்க மாட்டியா’னு கேட்டேன்.

அதுக்கு அவ, ”இன்னைக்கு சைடிஷ்ஷா கொடுக்குறேனு அமைதியா சாப்பிடு… நாளைக்கு இதான் மெயின் டிஷ்ஷே..”னு நறுக்குனு சொல்லிட்டு கிச்சனுக்கு போயிட்டா…

அடுத்த கேள்வி கேக்கலாம் தான்… அடுத்த வேல சோத்த நெனச்சி பாத்து சத்தமே இல்லாம.. முறுக்கு கடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

சரவணன்

சிலர் தீபாவளிக்கும் சேமிக்கிறாங்க

காசையா மாமா?!

காசா?!… கார்த்திகை தீபத்திற்கு பட்டாசை மாப்ள…


Sasikumar J

அநியாயத்தை ஒரு பொண்ணு தட்டி கேட்டா எவ்வளவு தைரியம் பாத்தியா அப்படின்னு சொல்றதும்,

அதுவே ஒரு ஆண் தட்டி கேட்டா என்ன குடிச்சிருக்கியான்னு கேட்கிறதும் இந்த உலகம் தான்…!


Mannar & company™🕗

சாப்பாட்டுக்கு முறுக்கு சைடிஷா கொடுத்தால் கசக்குது..
சரக்குக்கு மட்டும் சைடிஷ்க்கு முறுக்கு கொடுத்தால் இனிக்குதோ?!

#சைடிஷ்_பரிதாபங்கள்

mohanram.ko

சில பொண்ணுங்க காய்கறி கடைக்கு வந்து இதே டிசைன்ல வேற கலர்ல கொடுங்கன்னு வெங்காயம் கேட்குறாங்க…

யார்றா இவளுங்க…

மன்னர்

யாருடா அது முறுக்குக்கு தேன்குழல்னு வேற பேரு வச்சது

நான் கூட ஸ்வீட்ன்னு நினைச்சி அரை கிலோ வாங்கிட்டு வந்து வீட்ல பார்க்கிறேன் உள்ளே

முறுக்கு வச்சிருக்கான்!!

கோவிந்தராஜ்

நான் கடன் வாங்கின பேங்க் காரன் கூட எனக்கு ஹேப்பி தீபாவளி என்று மெசேஜ் பண்ணுகிறேன்

ஆனா என் டோலிக்கு அப்படி தோணலையே… 😪😪

மை மம்மி ~ செருப்பு பிஞ்சிரும்

அரவேட்டு

~ நாங்க எம்ஜிஆரையே பார்த்தவன்டா

அப்பறம் அவ்வளவு தானா?!

~ அதான் இல்ல அதுக்கப்பறம் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் எங்களை ஓரமா உட்கார வச்சதை பார்த்தோம்…

முடிஞ்சிருச்சா இன்னும் இருக்கா?!

~ அதான் இல்ல இப்ப விஜயையும்…….

ரைட்டு… கிளம்பிருவோம்

🄰🅃🄲 ™

After 5 days of Diwali Holidays

Monday morning ~ டேய் ஸ்கூல் எல்லாம் திறந்துட்டாங்க எந்திரி டா

லிட்டில் பிரின்சஸ் ~ ஸ்கூலா ? அப்டினா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

அமரன் முதல்நாள் வசூல் சாதனை : கமல் உருக்கம்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு : விஜய் பேச்சை வரவேற்ற செல்வப்பெருந்தகை

+1
3
+1
14
+1
1
+1
7
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *