சிறுத்தைய விட இதான் பயங்கரம் : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு சோசியல் மீடியால குடியரசு தலைவர் மாளிகைல நேத்து பதவியேற்பு விழா நடக்கும்போது சிறுத்தை போனதா ஒரு வீடியோ வைரல் ஆகிட்டு இருந்துச்சி.

அத பாத்துட்டு வந்து… ”ஜனாதிபதி மாளிகைலேயே சிறுத்த (அது பூன தான்) போகுதுப்பா… பாக்கவே ரொம்ப பயமா இருக்கு”னு பக்கத்து சீட் மாலா எல்லோர்கிட்டேயும் ஓவர் ரியாக்சன் பன்னிட்டு இருந்தா…

அத கேட்டுட்டு வந்த டி.எல். ”நிர்மலா சீதாராமன் மறுபடியும் நிதியமைச்சர் ஆகுறது விடவும் அது ஒன்னும் பயங்கரமானது இல்ல… போங்க  போய் வேலைய பாருங்க”னு சொல்லி மாலாவுக்கு பாலா மாதிரி டைமிங்ல பதில் சொன்னாரு…

உண்மையிலேயே சிறுத்தைய விட சீதாராமன நெனச்சா கொஞ்சம் திகிலா தான் இருக்கு…

நீங்க அப்டேட் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மந்திரிசபைலயே இதான் த்ரில்லிங்கான இடம், பயப்படாதீங்க ஆனா காதை பொத்திக்குங்க..

நான் பயப்படல, நீ தைரியமா சொல்லு..

மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்..

கவிதன்

வீட்லயும் ஆபிஸ்லயும் ஆயிரம் பிரச்சனை கிடக்கு.
ஆனாலும், ஒரு ட்வீட்க்கு ரெண்டு லைக் சேர்ந்து விழுந்துட்டா
என்னமோ சாதிச்சு தள்ளிட்ட மாதிரி மனசு குஷி ஆகிருது..

மானங்கெட்ட மனசு சார், இது !

🐦𓃵வானம்பாடி𓃵🐦

குழந்தைகளுக்கு.. நல்லது கெட்டது சொல்லி வளர்ந்துங்க…😏

ஏதோ கை ல வச்சு இருந்த சாக்லேட் ஆ புடிங்கி சாப்ட்டேனு..😏

செவ்வாய் கிரகத்துக்கு கேட்கற அளவுக்கு கியா மியா நு கத்துது..

குருநாதா

காக சொத்தையே எழுதிவைக்கி றாங்கனா பாத் துக்குங்க… மனுச னுக்கு பணத்த விட நிம்மதி எவ்வளவு முக்கியம்னு..!!!

Image

வ்னிதா ஆ

கடவுளுக்குப் பயந்து வேலை செய் கிறவனைக் காட்டிலும்

எனக்கு பயந்து வேலை செய்பவன் தான் அதிகம்.

இப்படிக்கு சிசிடிவி

Kirachand

காந்திஜியின் கொள்கைகள் என்னை வழிநடத்தும்! – மோடிஜி

அப்போ நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுனு என்ன தக்காளி தொக்கா?

Image
balebalu

எதுக்குடா சிரிக்குற ?

இத்தனை மோசமா நிர்வாகம் பண்ணியும் திரும்ப திரும்ப
அந்த அம்மாக்கு நிதி அமைச்சர் பதவி கொடுக்குராங்களே

அவங்க கட்சில வேற ஒருத்தர் கூட தகுதியா இல்லை ன்னு அவங்களே விளம்பர படுத்திகிராங்களே

அதை நினைச்சேன் சிரிச்சேன்

Image
செங்காந்தள்

பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி எல்லாம்
கூட்டுக்குடும்பங்கள் உடைந்த பின் உருவாக்கப்பட்ட புதிய படிப்புகள்…!!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி நியமனம்!

மோடி 3.0 அமைச்சரவை : யார் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!

+1
1
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *