இன்னைக்கு ஆடி பொறந்துடுச்சி… அதுக்கு அறிகுறியா காலைலேயே கமகமன்னு காபிய குடுத்துட்டு, வீட்டம்மா நியூஸ் பேப்பர எடுத்துட்டு வந்து எதுக்க உக்காந்துச்சி.
என்ன புதுசா பேப்பர்லா படிக்குறானு பாத்தா… நேரா கடைசி பக்கத்துக்கு போயி, ‘என்னங்க ஆடி பொறந்துடுச்சி… ஒரு 5 கட பேர் சொல்லி, இதுலெல்லாம் நல்லா ஆஃபர் போட்டுருக்காங்க… நீங்க எனக்கு என்ன வாங்கி தர போறீங்க?’னு கேட்டா பாருங்க…
வந்த ஆத்திரத்துல… காபிய மடக் மடக்குன்னு குடிச்சிட்டு, பொறுமையா ’போனா மாசம் தான் புள்ளைங்க ஸ்கூல் பீசு கட்டி முடிஞ்சுது… இந்த மாசம் கரண்ட் பில், தக்காளி ரேட் எல்லாம் எகிறிட்டு இருக்கு… சோ ஆடில தள்ளுபடிக்கு வாங்குறதுக்கு பதிலா.. ஆடியவே தள்ளுபடி பண்ணிருவோம்’னு தான் சொன்னேன்.
அதுக்கு ’ஹூக்கும்… போய் டீ கிளாஸ கழுவி வைங்க’னு சொல்லிட்டு நகந்துட்டா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
ArulrajArun
ஏன்ணே அவன அடிச்சிங்க
பின்ன என்னப்பா மின்சார கட்டண உயர்வுக்கு ஆடி மாசத்துல ஏதும் தள்ளுபடி இருக்கான்னு கேட்கிறான்
Kirachand
காமராஜரின் பாதையில் மோடி செல்கிறார்! – அண்ணாமலை
காமராஜர் எப்பண்ணே போட்டோ ஷூட் எடுத்தாரு?
Writer SJB
இந்த வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒரே ஜீவன் பஸ் கண்டக்டர் தான்..!
(முன்னாடி போங்க… முன்னாடி போங்க…)
நெல்லை அண்ணாச்சி
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் மாயம்? – அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி.
# “எடை குறைப்பாளர்” தான் காரணம் …
ரஹீம் கஸ்ஸாலி
ஏசியையும் போட்டுக்கொண்டு, போர்வையும் போர்த்திக்கொண்டு தூங்குவதென்பது ஏசிக்கு செய்யும் துரோகம்.
balebalu
மின் கட்டண உயர்வு இருக்கட்டும் ஆனா monthly billing system கொண்டு வர போறதா சொண்ணாங்களே என்ன ஆச்சு
ச ப் பா ணி
யோசிச்சுப் பார்த்தா..
நிறைய யோசிக்கிறதுதான் அதிக பிரச்சனைக்குக் காரணம்..
இப்பதான் யோசிச்சேன்
mohanram.ko
விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் பண்ற அரசால, சிம் கார்டு ரீசார்ஜ்க்கு விலை நிர்ணயிக்க முடியல பார்த்தியா, அது தான் இந்த மண்ணோட மகிமை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
மாப்பிள்ளை சபரீசன் பிறந்தநாள்: திரண்ட அமைச்சர்கள்!
திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரா நீதிபதி சந்துரு? : அண்ணாமலை கேள்வி!