சென்னை ரிட்டர்ன்ஸ் பரிதாபங்கள் : அப்டேட் குமாரு!

Published On:

| By christopher

இன்னைக்கு நண்பன் பொங்கல் லீவு முடிஞ்சி ஊருல இருந்து கிளம்பி வாரேன்னு மதியம் போன் பண்ணி சொல்லிருந்தான்.

ரைட்டு வீக் எண்ட் நமக்கு ஜாலி தான்னு ரொம்ப சந்தோசமா இருந்தேன்.

ஆனா 9 மணி ஆயிடுச்சி இன்னும் ஆள காணோம். எங்க இருக்கனு போன் போட்டு கேட்டா, ’அட போடா ஊருக்கு போனவன் பூரா, ஞாயித்துக்கிழம கெளம்புவான்னு நெனச்சி தான் இன்னைக்கு வந்தேன். ஆனா அம்புட்டு பேரும் இன்னைக்கே கெளம்பி வந்துருக்கானுங்க…

நான் இன்னும் பெருங்களத்தூர்ல தான் இருக்கேன்னு அழுவுறான்…

பொங்கல் லீவுக்கு என்ன வுட்டுட்டு போனதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்னு நெனச்சிக்கிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

கோவிந்தராஜ்

நடந்தா கொழுப்பு குறையும்ல

அது மாதிரி
பேசுனா வாய்க்கொழுப்பு குறையுமா??

டவுட் 😌

Galadriel 2.0

ஆட்டுக்குட்டி மேல பிராது குடுத்த லெட்டர் ஃபேக்காம்..

~ எப்படி சொல்றே?

இல்ல, அவுகளுக்கு மொட்டை கடுதாசிதான் போட்டு பழக்கமாம். இப்பிடி பேரோடலாம் போட மாட்டாளாம்.

ஜோ

விஜய் பக்குவப்பட்ட தலைவராக தெரிகிறார் – அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஓ… மோடிய டேடினு சொன்னவர் தானே?

Sabarish_twittz

இன்னைக்கு காலத்தில்
கேமரா ஃபோன் இருக்கவங்க போட்டோகிராபர்
யூடியூப் இருந்தா ஆக்டர்ஸ்…

கனகு

பொங்கல் முடிஞ்சதும் ஜிம்முக்கு போலாம்னு சொன்னியே, வாடா போலாம்..

: டேய்.. IPL முடிஞ்சதும் போய்க்லாம் டா..

பாக்டீரியா

9 கோடி வருசமா குரங்கா இருந்தோம்..

4 லட்சம் வருசமா மனுசனா இருந்தோம்…

10 ஆயிரம் வருசமா தமிழனா இருந்தோம்…

2000 வருசமா மதம் & ஜாதி வந்து பைத்தியமா அலையிரோம்….

RJ Uma Rajan

அவன் – உன் மேல் நான் கொண்ட காதல் உண்மையானது.

மீ- ரைட்டு, இது உன் பொண்டாட்டிக்கு தெரியுமா?

கோவிந்தா

ஆணாக பிறந்த ஒருவன்….

கல்யாணம் ஆகாமலும் கஷ்டபடுவான்

கல்யாணம் ஆன பிறகும் கஷ்டபடுவான் …..

▶படிக்காதவன்™✍

மாநாடு கூட்டத்தில் நிக்கிற மாதிரி நின்னுட்டு இருக்கானுங்க ஒயின்ஷாப்ல…

ஊட்டி வளர்க்கனும்’ங்கிற மாதிரி குடிக்க வச்சே அழிக்கிறாங்க…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share